பாவு | |
---|---|
Bau | |
நகரம் | |
ஆள்கூறுகள்: 1°25′0″N 110°0′9″E / 1.41667°N 110.00250°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | கூச்சிங் |
மாவட்டம் | பாவு |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 62,200 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 93250 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | 6082 |
பாவு (மலாய் மொழி: Pekan Bau; ஆங்கிலம்: Bau Town) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் கூச்சிங் பிரிவு; பாவு மாவட்டத்தில் உள்ளது ஒரு நகர்ப் பகுதியாகும்.
1840-களில் பாவ் நிலப் பகுதியில் தங்கம் இருப்பது சீனச் சுரங்கத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. சுரங்கத் தொழில்கள் படிப்படியாக போர்னியோ நிறுவனத்தால் (The Borneo Company) கையகப் படுத்தப்பட்டன. 1921-இல் சுரங்கங்கள் மூடப்பட்டன.[1]
1970-களின் பிற்பகுதியில் உலக தங்கத்தின் விலை உயர்ந்த போது சுரங்கங்கள் மீண்டும் திறக்கப் பட்டன. ஆனால் ஆசிய நிதி நெருக்கடி தொடங்கியபோது 1996-இல் மீண்டும் மூடப்பட்டன.[2] 2014-ஆம் ஆண்டு நிலவரப்படி, சுரங்க உரிமைகள் நார்த் போர்னியோ கோல்ட் நிறுவனத்திடம் (North Borneo Gold) இருந்தது.[3]
1 மே 1837-இல், செக்ராங் இபான்கள் (Skrang Ibans); பிரதாக் மலை (Bratak Peak) சிகரத்தின் உச்சியில் இருந்த சகோய் - பிரதாக் பிடாயூ (Jagoi-Bratak Bidayuh) குடியேற்றப் பகுதியில் வாழ்ந்த பிடாயூ மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். 2,000 சகோய் - பிரதாக் பிடாயூ ஆண்களைக் கொன்றார்கள். 1,000 பெண்களைச் சிறைபிடித்தார்கள்.
சகோய் - பிரதாக் பிடாயூ சமூகத்தின் தலைவரான பாங்லிமா குலோவ் மற்றும் அவரின் சீடர்கள் சிலர் படுகொலையில் இருந்து தப்பினர்.
1841-ஆம் ஆண்டில் சரவாக்கின் புதிய வெள்ளை ராஜா ஜேம்ஸ் புரூக், சிறைபிடிக்கப்பட்ட சில பெண்களை மீட்டு எடுத்தார்.
ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி, 1837 படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்களின் சந்ததியினர் தங்கள் முன்னோர்களின் நினைவாக பாவ் பகுதியில் உள்ள பிரதாக் சிகரத்தின் உச்சியில் ஜாகோய் - பிரதாக் தினத்தை (Jagoi-Bratak Day) கொண்டாடுகிறார்கள். அந்த நாளைக் குறிக்கும் வகையில், 1988 மே 1-ஆம் தேதி ஒரு நினைவுக் கல் அமைக்கப்பட்டது.[4][5]