பிகாரி லால் குப்தா (Behari Lal Gupta) இந்திய ஆட்சிப்பணியிலிருந்த இவர் அரசியல்வாதியாகவும் இருந்தார்.
குப்தா கொல்கத்தாவில் ஒரு மருத்துவ குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் குப்தா மற்றும் ராஜேஸ்வரி என்பவராவர். இவரது தாயார் பிரம்ம சமாஜத்தின் வார இதழான இந்தியன் மிரர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் நரேந்திரநாத் சென்னின் மூத்த சகோதரியாவார்.
இவரது ஆரம்ப கல்வி கொல்கத்தாவின் அரே பள்ளி மற்றும் மாநிலக் கல்லூரியில் இருந்தது. பின்னர் இவர் தனது குழந்தைப் பருவ நண்பர்களான இரமேஷ் சுந்தர் தத் மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோருடன் உயர் படிப்புகளுக்காக இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார். இறுதியில் ஆட்சிப்பணிக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். 1869ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்த மூன்றாவது இந்தியரானார். 1871இல் இந்தியாவுக்கு வந்தார். 1869 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்த ஆர்.சி தத், தானே, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சிறிபாத் பாபாஜி தாக்கூர் உட்பட நான்கு இந்தியர்களை தயார் சேர்ந்தவராவார். [1] இவர், சமசுகிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் பட்டம் பெற்றிருந்தார். [2] கொல்கத்தாவின் பவானிபூரில் பிரம்ம சம்மேலன சமாஜத்தின் [3] உறுப்பினராகவும் இருந்தார்.
இந்திய ஆட்சிப்பணியில் இவரது வாழ்க்கை வேறுபடுத்தப்பட்டது: இவர் 1872 ஆம் ஆண்டில் கொல்கத்தாவின் முதல் இந்திய தலைமை தலைமை நீதிபதியானர். இந்த நியமனம், ஒரு இந்திய குடிமகன் பிரிட்டிசு இந்தியாவில் இத்தகைய மூத்த பதவிக்கு நியமிக்கப்படுவதன் நியாயத்தன்மை குறித்த தீவிர விவாதத்தைத் தூண்டியது. 1883 இல் இல்பர்ட் மசோதா சர்ச்சைக்கு வழிவகுத்தது. [4] இவர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, சட்ட விவகார கண்காணிப்பாளர், வங்காளம், உறுப்பினர், வங்காள சட்டமன்றம் மற்றும் இறுதியாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி போன்ற பதவிகளை வகித்துவிட்டு 1907 இல் ஓய்வு பெற்றார்.
ஓய்வுக்குப் பின்னர் 1909 ஆம் ஆண்டில் இவர் பரோடாவின் சட்டம் மற்றும் நீதி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் , 1912 இல் திவானாக நியமிக்கப்பட்டார். 1914 ஆம் ஆண்டில் இவர் பரோடா மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட்டுடன் ஐரோப்பாவுக்கு பயணம் செய்தார்.