பிதல்கோரா குகைகள் (Pitalkhora Caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில், எல்லோராவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பிதல்கோரா குடைவரைகளை பராமரிக்கிறது.[1]
பிதல்கோரா குகைகள், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிதல்கோராவின் 14 குடைவரைகள் இரண்டு தொகுதிகளுடன் கூடியது. இக்குடைவரைகளை கிமு 250 முதல் ஈனயான பௌத்த பிக்குகள் பயன்படுத்தினர். பின்னர் மகாயான பிக்குகள், இக்குடைவரையில் பௌத்த ஓவியங்கள் வரைந்தனர். இங்குள்ள கல்வெட்டுக்களில் கிமு 250 முதல் கிபி நான்காம் நூற்றாண்டு வரையிலான காலத்திய குறிப்புகளைக் கொண்டுள்ளது.[2]
பிதல்கோராவின் 14 குகைகளில், நான்கில் சைத்தியங்களையும், விகாரைகளையும் கொண்டுள்ளது. பிறகுடைவரைகளில் தூபிகளும், சிற்பங்களும் கொண்டுள்ளது. எல்லோரா மற்றும் அஜந்தா பௌத்தக் குடைவரைகளைப் போன்றே பிதல்கோரா குடைவரைகளும் நிறுவப்பட்டுள்ளது. [3]