பின்னேயசு எசுகுலெண்டசு (Penaeus esculentus)(பழுப்பு புலி இறால், பொதுவான புலி இறால் அல்லது புலி இறால்)[2] என்பது இறால் வகைகளுள் ஒன்றாகும். ஆத்திரேலியா சுற்றுப்பகுதியில் உணவுக்காகப் இது பரவலாகப் பிடிக்கப்படுகிறது.
இளம் பி எசுகுலெண்ட்சுகடற்புல் படுக்கைகளில் வாழ்கின்றன.[3] பாலியல் முதிர்ச்சியானது இதனுடைய தலையோடு 32 மில்லி மீட்டராக இருக்கும்போது நிகழ்கிறது.[4] முதிர் உயிரிகளில் இது 155 மில்லிமீட்டர்கள் (6.1 அங்) வரை வளரும்.[5] இந்த இறால் பழுப்பு நிறமாக பின்னேயஸ் மோனோடானை ஒத்திருக்கிறது.[6] இவை கடல் பகுதியில் சுமார் 200 மீட்டர்கள் (660 அடி) ஆழம் வரை வாழக்கூடியது.[7]
பி எசுகுலெண்ட்சுஆஸ்திரேலியாவின் வெதுவெதுப்பான கடல் பகுதிகளான, மத்திய நியூ சவுத் வேல்ஸ் (சிட்னி அருகே வரை) சுறா குடா, மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது.[8] இவை அதிகமாக 16 முதல் 22 மீட்டர் ஆழத்தில் காணப்படும்.[5] ஆஸ்திரேலியாவிற்கும் நியூ கினியாவிற்கும் இடையிலான ப்ளீஸ்டோசீன் நிலப் பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் காணப்படும் இந்த இறால் இனங்களின் வேறுபாடு மிகவும் குறைவாக உள்ளது.[9]
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 டன் பழுப்பு புலி இறால்கள் பிடிக்கப்படுகின்றன.[8] Fisheries in Torres Strait are worth around A$24 million per year.[10] டோரஸ் நீரிணையில் பிடிக்கப்படும் இறாலின் ஆண்டுக்கு சுமார் 24$ ஆகும். இது பின்னேயஸ் மோனோடானுடன் நெருக்கமாகத் தொடர்புடையது.[11] இதன் மூலம் கலப்பினமாக்கல் எளிதாக உள்ளது. இந்த இறால் மீன் வளர்ப்பிற்கு ஏற்ற தன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும் இது பி. மோனோடோனை விட வேகமாக வளர்வதுடன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. [12]
வில்லியம் ஐட்சன் ஹஸ்வெல் என்பார் 1878இல் ஆத்திரேலியாவுக்கு வந்து, வாட்சன் விரிகுடாவில் கடல் விலங்கியல் ஆய்வகத்தில் பணியாற்றத் தொடங்கினார். 1879ஆம் ஆண்டில், நியூ சவுத் வேல்ஸின் லின்னியன் சொசைட்டியின் செயல்முறைகளில் ஒரு கட்டுரையில் பினேயஸ் எஸ்குலெண்டஸை விவரித்துக் கூறியிருந்தார். இந்த மாதிரியானது மேக்லே அருங்காட்சியகத்திற்கு ஜாக்சன் துறை மற்றும் போர்ட் டார்வின் ஆகிய இடத்திலிருந்து பெறப்பட்டதாகும். பி. எஸ்குலெண்டஸ் " சிட்னி மற்றும் நியூகேஸில் போன்ற நகர்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பொதுவான இறால் வகைகளுள் ஒன்று.[13]
↑"Penaeus esculentus Haswell, 1879". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 8 November 2010.
↑Robert D. Ward; Jennifer R. Ovenden; Jennifer R. S. Meadows; Peter M. Grewe; Sigrid A. Lehnert (2006). "Population genetic structure of the brown tiger prawn, Penaeus esculentus, in tropical northern Australia". Marine Biology148 (3): 599–607. doi:10.1007/s00227-005-0099-x.
↑J. A. H. Benzie; M. Kenway; E. Ballment; S. Frusher; L. Trott (1995). "Interspecific hybridization of the tiger prawns Penaeus monodon and Penaeus esculentus". Aquaculture133 (2): 103–111. doi:10.1016/0044-8486(95)00013-R.
↑Sandy J. Keys, Peter J. Crocos & Oscar J. Cacho (2004). "Commercial grow-out performance and cost-benefit analysis for farm production of the brown tiger shrimp Penaeus esculentus". Aquaculture Economics & Management8 (5/6): 295–308. doi:10.1080/13657300409380371.