பிரகலாத் சிங் திபன்யா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | பிரகலாத் ஜி, திபானியா ஜி |
இசை வடிவங்கள் | நாட்டுப்புற இசை |
தொழில்(கள்) | பாடகர், அரசியல்வாதி, சமூக சேவகர் |
இசைத்துறையில் | 1978[1] – தற்போது வரை |
இணையதளம் | http://www.kabirproject.org |
பிரகலாத் சிங் திபன்யா (Prahlad Singh Tipaniya) ஒரு இந்திய நாட்டுப்புறப் பாடகர் ஆவார், இவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மால்வி நாட்டுப்புற பாணியில் கபீர் பஜனைகளை நிகழ்த்துகிறார். [2] [3]
இவர் தம்புரா, கர்தல், மஞ்சிரா, தோலக், ஹார்மோனியம், டிம்கி மற்றும் வயலின் கலைஞர்களின் குழுவுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
பிரகலாத் திபானியா 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் மத்தியப் பிரதேசத்தின் மால்வாவில் உள்ள லுனியாகேடி, தாரானாவில் ஒரு மால்வி பலாய் சாதிக் குடும்பத்தில் பிறந்தார். [4]
பிரகலாத் சிங் திபன்யா ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் பாக்கித்தான் மற்றும் இந்தியாவிலும் "அமெரிக்கா மீ கபீர் யாத்ரா" மற்றும் "ஹத்-அன்ஹாத்" எனப் பெயரிடப்பட்ட வெவ்வேறு 'யாத்ராக்களில்' பயணம் செய்துள்ளார், மேலும் இவரது இசை இந்தூரில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களில் ஒலிக்கப்பட்டுள்ளது. போபால், ஜபல்பூர், பாட்னா, லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பப் பட்டுள்ளது. தூர்தர்ஷனிலும் இவரது இசைக் கச்சேரிகள் இடம்பெற்றது. மத்தியப் பிரதேச அரசின் ஷிகர் சம்மான் (2005), 2007-ஆம் ஆண்டில் சங்கீத் நாடக அகாடமி விருது மற்றும் 2011-ஆம் ஆண்டில் பத்மசிறீ உட்பட பல விருதுகளை திபானியா பெற்றுள்ளார் [5] [6]
இவர் ஆண்டுதோறும் சூஃபி இசை விழா, ருஹானியாத் மற்றும் எண்ணற்ற கபீர் விழாக்களிலும் பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளார். இவர் "சத்குரு கபீர் ஷோத் சன்ஸ்தான்" என்ற திட்டத்தையும் நடத்தி வருகிறார்.
இவர் இளங்கலை அறிவியல் பட்டதாரி ஆவார். இவர் அரசுப் பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியராக உள்ளார். [7] இவர் 1980 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். உஜ்ஜைனியில் உள்ள அரசாங்க மகாவித்யாலயா தேவாஸ் விக்ரம் பல்கலைக்கழகத்தில் 1984 ஆம் ஆண்டில் வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[8] [9]
"அஜப் சாஹர்- தி கபீர் ப்ராஜெக்ட்" என்ற திட்டத்தின் கீழ் இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளரான ஷப்னம் விர்மானி தயாரித்த 3 ஆவணப் படங்களில் திபன்யாவும் பங்கு பெற்றுள்ளார்.
இவர் இந்திய தேசிய காங்கிரசில் [10] சேர்ந்தார். இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ்-ஷாஜாபூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 2019-ஆம் ஆண்டில் இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். [11] [12] [13]