பிரபிர் ஃகோசு (Prabir Ghosh, பிறப்பு மார்ச் 1, 1945) இந்திய அறிவியலாளர்கள் பகுத்தறிவாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும், கொல்காத்தாவின் மனிதபிமான ஒன்றியத்தின் தலைவரும் ஆவார். மூடநம்பிக்கைகள், சாமிமார்கள், அற்புதங்கள் போன்ற மீவியற்கை கோரிக்கைகளுக்கு எதிராக மிக தூண்டல் முறையிலான பொதுமக்கள் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்தவர். இவர் மீவியற்கை சக்திகளை நிரூபிப்பவர்களுக்கு 2 மில்லியன் இந்திய ரூபாய் பரிசு ஒன்றையும் அறிவித்துள்ளார்.[1][2][3]