பிரமோத் மகாஜன் | |
---|---|
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் | |
பதவியில் 2 செப்டம்பர் 2001 – 28 ஜனவரி 2003 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | இராம் விலாசு பாசுவான் |
பின்னவர் | அருண் சோரி |
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் | |
பதவியில் 13 அக்டோபர் 1999 – 29 ஜனவரி 2003 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | ப. அரங்கராஜன் குமாரமங்கலம் |
பின்னவர் | சுஷ்மா சுவராஜ் |
பதவியில் 16 மே 1996 – 1 ஜூன் 1996 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | குலாம் நபி ஆசாத் |
பின்னவர் | இராம் விலாசு பாசுவான் |
பாதுகாப்புத் துறை அமைச்சர் | |
பதவியில் 16 மே 1996 – 1 ஜூன் 1996 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | பி. வி. நரசிம்ம ராவ் |
பின்னவர் | முலாயம் சிங் யாதவ் |
மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1996–1998 | |
முன்னையவர் | குருதாஸ் காமத் |
பின்னவர் | குருதாஸ் காமத் |
தொகுதி | வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரமோத் வியாங்கதேஷ் மகாஜன் 30 அக்டோபர் 1949 மகபூப்நகர், ஐதராபாத்து மாநிலம், இந்திய ஒன்றியம் (தற்போது தெலங்காணா, இந்தியா) |
இறப்பு | 3 மே 2006 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 56)
Manner of death | படுகொலை |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ரேகா மகாஜன் |
பிள்ளைகள் | ராகுல் மகாஜன் பூனம் மகாஜன் |
வாழிடம் | வொர்லி, மும்பை, மகாராட்டிரம் |
As of 5 மே 2006 மூலம்: [1] |
பிரமோத் வியாங்கதேஷ் மகாஜன் ( Pramod Vyankatesh Mahajan ) (30 அக்டோபர் 1949 - 3 மே 2006) மகாராட்டிராவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) இரண்டாவது தலைமுறை தலைவரான இவர் ஒப்பீட்டளவில் இளம் "தொழில்நுட்ப" தலைவர்களின் குழுவில் சேர்ந்தவர். இவர் இறக்கும் போது, பாஜகவின் தலைமைப் பதவிக்கான அதிகாரப் போட்டியில் இருந்தார்.[2]
இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும்]] பாஜகவின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இவர் மும்பை - வடகிழக்கு தொகுதியிலிருந்து மக்களவைத் தேர்தல்களில் இரண்டு முறை மட்டுமே போட்டியிட்டார். இவர் 1996இல் வென்றார், ஆனால் 1998 இல் தோற்றார். 2001 முதல் 2003 வரை பிரதமர் அடல் பிகாரி வாச்பாயின் அரசில் தொலைத்தொடர்பு அமைச்சராக பணியாற்றி இந்தியாவின் செல்பேசி புரட்சியில் இவர் பெரும் பங்கு வகித்தார். தனது கட்சியின் சித்தாந்தத்தைத் தாண்டி தனது வாழ்நாள் முழுவதும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடனான நல்ல உறவின் காரணமாக இவர் ஒரு வெற்றிகரமான நாடாளுமன்ற விவகார அமைச்சராக பரவலாகக் காணப்பட்டார்.[3]
2006 ஏப்ரல் 22 அன்று, குடும்பத் தகராறு காரணமாக இவரது சகோதரர் பிரவின் மகாஜனால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரவினுக்கு 2007இல் நீதிமன்றம் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தது.