பிரம்மாவர் Brahmavara | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 13°24′14″N 74°42′25″E / 13.404°N 74.707°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | உடுப்பி |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,31,203[1] |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசிக் குறியீடு | 0820[2] |
வாகனப் பதிவு | கே.ஏ-20[3] |
பிரம்மாவர் (Brahmavar) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்திற்கு வடக்கில் தேசிய நெடுஞ்சாலை எண் 66 பாதையில் 13 கிலோமீட்டர்கள் (8.1 mi) இல் அமைந்துள்ள ஒரு தாலுக்கா ஆகும். முன்னதாக இப்பாதை தேசிய நெடுஞ்சாலை எண் 17 என அழைக்கப்பட்டது.
பிரம்மாவர் நகரம் சுமார் 68 கிலோமீட்டர்கள் (40 mi) மங்களூருக்கு வடக்கிலும் சுமார் 13 கிலோமீட்டர்கள் (10 mi) உடுப்பிக்கு வடக்கிலும் தேசிய நெடுஞ்சாலை எண் 66 (முன்பு தேசிய நெடுஞ்சாலை 17) பாதையில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் சுவர்ணா மற்றும் சீதா ஆறுகள், அங்கர்கட்டேவிற்கு அருகே அரபிக்கடலில் சேர்வதற்கு முன் பிரம்மவர் நகரத்தைச் சுற்றி உப்பங்கழிகளை உருவாக்குகின்றன.
பிரம்மாவர் நகரமானது அந்தாடி, பைக்காடி, பெத்ரி, குஞ்சல், கும்ரகோடு, சாலிகேரி, அரடி மற்றும் மாடபாடி உள்ளிட்ட பல கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. பிரம்மவர் நகரத்தின் வடக்கே பர்கூர் உள்ளது. இதன் தெற்கில் கோயில் நகரம் உடுப்பி அமைந்துள்ளது .
{{cite web}}
: Check |url=
value (help); Missing or empty |title=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]