GCMG CH | |
---|---|
பிராங்க் சுவெட்டன்காம் | |
பதவியில் 1925–1938 | |
தலைமை ஆளுநர் நீரிணை குடியேற்றங்கள் | |
பதவியில் 5 நவம்பர் 1901 – 16 ஏப்ரல் 1904 | |
ஆட்சியாளர்கள் | விக்டோரியா; ஜோர்ஜ் VI |
தலைமை ஆளுநர் | |
பதவியில் 1 சூலை 1896 – 4 நவம்பர் 1901 | |
5-ஆவது பிரித்தானிய பேராக் ஆளுநர் | |
பதவியில் 1 சூன் 1889 – 30 சூன் 1896 | |
முன்னையவர் | இயூ லோ |
பின்னவர் | வில்லியம் ஊட் திரேச்சர் |
3-ஆவது பிரித்தானிய சிலாங்கூர் ஆளுநர் | |
பதவியில் செப்டம்பர் 1882 – மார்ச் 1884 | |
2-ஆவது பிரித்தானிய பேராக் ஆளுநர் | |
பதவியில் 5 நவம்பர் 1875 – மார்ச் 1876 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெல்பர், இங்கிலாந்து | 28 மார்ச்சு 1850
இறப்பு | 11 சூன் 1946 லண்டன் | (அகவை 96)
துணைவர் | கான்சுடன்சு சிட்னி ஓல்ம்சு |
வாழிடம்(s) | கார்கோசா ஸ்ரீ நெகாரா, கோலாலம்பூர், மலேசியா |
வேலை | காலனித்துவ அதிகாரி |
பிராங்க் சுவெட்டன்காம் அல்லது சர் பிராங்க் அதெல்சுதான் சுவெட்டன்காம் (பிறப்பு: 28 March 1850 – இறப்பு: 11 June 1946); (ஆங்கிலம்: Sir Frank Athelstane Swettenham; மலாய் மொழி: Frank Swettenham; சீனம்: 瑞天咸); என்பவர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் எனும் பிரித்தானிய மலாயா நிர்வாக அமைப்பின் முதல் தலைமை ஆளுநராக 1896-ஆம் ஆண்டில் பதவி வகித்தவர். மலாயா ஒன்றியம் அமைக்கப் படுவதை எதிர்த்த பிரித்தானிய அதிகாரிகளில் இவரும் ஒருவர்.[1]
மலேசிய வரலாற்றில் தடம் பதித்துச் சென்ற மிக முக்கியமான பிரித்தானியர்களில் ஒருவராக பிராங்க் சுவெட்டன்காம் அறியப் படுகிறார். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களுக்கும்; மற்றும் பல சாலைகளுக்கும் இவரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இவரின் சேவைகளுக்காக சிலாங்கூர் மாநிலத்தில் சுவெட்டன்காம் துறைமுகம் (ஆங்கிலம்: Port Swettenham; மலாய் மொழி: Pelabuhan Swettenham) எனும் பெயரில் ஒரு துறைமுகத்திற்கும் பெயர் வைக்கப் பட்டது. இப்போது அதன் பெயர் கிள்ளான் துறைமுகம்; (மலாய்: Pelabuhan Klang; ஆங்கிலம்: Port Klang). 1972-ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் அடைந்தது.[2]
இவர் 1 சூலை 1896 முதல் 4 நவம்பர் 1901 வரை பிரித்தானிய மலாயா நிர்வாக அமைப்பின் முதல் தலைமை ஆளுநராகப் (Resident-General) பணியாற்றியவர். அத்துடன் இவர் தொழில்முறை அல்லாத ஓர் ஓவியர்; ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் பழங்காலக் கலைப் பொருள்கள் சேகரிப்பாளராகவும் இருந்தவர்.[3]
இவர் 1850 மார்ச் 28-ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள பெல்பர் (Belper) எனும் இடத்தில் பிறந்தார். தகப்பனார் ஒரு வழக்கறிஞர்; பெயர் ஜேம்சு ஓல்ட்காம் சுவெட்டன்காம் (James Oldham Swettenham); தாயாரின் பெயர் சார்லோட் எலிசபெத் (Charlotte Elizabeth).
ஸ்காட்லாந்தில் உள்ள டாலர் அகாடமி (Dollar Academy) மற்றும் யார்க் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் (St Peter's School, York) கல்வி பயின்றார். இவருடைய மண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. தொடக்கத்தில் இருந்தே பிரச்சினைகள்; அவரின் திருமண வாழ்க்கை 1938-ஆம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் விவாகரத்து பெற்றார்.[4]
1871-ஆம் ஆண்டில், முதன்முதலில் நீரிணை குடியேற்றப் பகுதியின் பொதுச் சேவைத் துறையில் (Straits Settlements Civil Service) ஓர் இளநிலை அதிகாரியாகச் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார்.
பிரித்தானிய மலாயாவில் பிரித்தானிய நிர்வாகத்தின் கட்டமைப்பை வடிவமைப்பதில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். அங்கு அவர் மலாய் மொழியைக் கற்றுக் கொண்டார்.
1870-களில், தீபகற்ப மலாய் மாநிலங்களில் பிரித்தானிய தலையீடுகளில் சுற்றி இருந்த நிகழ்வுகளில், இவர் ஒரு பிரித்தானிய - மலாய் இடைத் தரகராக (British-Malay Intermediary) பங்கு வகித்தார்.
1874-ஆம் ஆண்டு பங்கோர் உடன்படிக்கை 1874 (Pangkor Treaty of 1874) கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட லாருட் அமைதி ஆணையத்தில் (Commission for the Pacification of Larut) இவர் ஓர் உறுப்பினராக இருந்தார்.
அந்தக் காலக்கட்டத்தில் இவர் ஜான் பிரடெரிக் அடோல்பஸ் மெக்நாயர் (John Frederick Adolphus) மற்றும் காப்பித்தான் சுங் கெங் கியூ (Kapitan Chung Keng Quee) மற்றும் காப்பித்தான் சின் செங் யாம் (Kapitan Chin Seng Yam) ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.
லாருட் போர்களின் (Larut Wars) போது (1862-73) சிறைபிடிக்கப்பட்ட உள்ளூர்ப் பெண்கள் பலரை விடுவிப்பதில் லாருட் அமைதி ஆணையம் வெற்றி பெற்றது. வர்த்தகத் தடைகளை அகற்றி ஈயச் சுரங்கத் தொழிலை மீண்டும் தொடங்கச் செய்தது.
1882-இல், இவர் தீபகற்ப மலேசிய மாநிலமான சிலாங்கூருக்கு பிரித்தானிய ஆளுநராக (Resident) நியமிக்கப்பட்டார். பதவியில் இருந்த காலத்தில், காபி மற்றும் புகையிலை தோட்டங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தார்; அதே வேளையில் ஈயச் சுரங்கத் தொழில் வருமானத்தையும் அதிகரிக்க உதவினார்.
அந்தக் கட்டத்தில் சிலாங்கூரின் தலைநகரமாக இருந்த கோலாலம்பூரில் இருந்து கிள்ளான் துறைமுகத்திற்கு தொடருந்து பாதை அமைவதற்கு முன்னோடியாக விளங்கினார். இந்தத் துறைமுகம் பின்னர் காலத்தில், அவரின் நினைவாகச் சுவெட்டன்காம் துறைமுகம் (Port Swettenham) என்று பெயரிடப்பட்டது.
1895-இல் பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களை ஒன்றிணைக்க, அந்த மாநிலங்களின் சுல்தான்களிடம் இருந்து ஒப்புதல்களைப் பெற்றார். பின்னர் அதுவே மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) (FMS) எனும் கூட்டமைப்பாக மாறியது.
அப்போது அவர் பேராக் மாநிலத்தின் பிரித்தானிய ஆளுநராக இருந்தார். அதன் பின்னர் அவர் பிரித்தானிய மலாயாவின் தலைமை ஆளுநராக (Resident-General) பதவி உயர்த்தப் பட்டார். 1897-இல் அவருக்கு விக்டோரியா மகாராணியாரால் (Queen Victoria) சர் விருது வழங்கப்பட்டது.
1901 அக்டோபர் மாதம், அவர் ஓய்வு பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நீரிணை குடியேற்ற மாநிலங்களுக்கான தலைமை ஆளுநராகவும் (Governor); தலைமைத் தளபதியாகவும் (Commander-in-Chief of the Straits Settlements) நியமிக்கப்பட்டார்.[5]
தீபகற்ப மலாயாவின் வடக்கு மாநிலங்களான கிளாந்தான் மற்றும் திராங்கானு மாநிலங்களின் மீது சயாம் இராச்சியத்தின் செல்வாக்கு பற்றி சுவெட்டன்காம் நீண்ட காலமாக விமர்சித்து வந்தார்.
அந்த இரு மாநிலங்களும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒரு தங்கப் பூங்கொத்தை (Bunga Emas) சயாம் அரசருக்கு அனுப்பி வந்தன. அதன் மூலம் அந்த இரு மாநிலங்களும் சயாமின் ஆதிக்கத்தைப் பாரம்பரியமாக அங்கீகரித்து வந்தன.
நீரிணை குடியேற்ற மாநிலங்களுக்கான தலைமை ஆளுநராக சுவெட்டன்காம் நியமிக்கப்பட்ட பிறகு, கிளாந்தான்; திராங்கானு மாநிலங்களின் விவகாரங்களில் பிரித்தானியச் செல்வாக்கை அதிகரிக்க, சயாமுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட முயற்சிகள் செய்தார்.
அந்த மாநிலங்களில் பிரித்தானிய ஆலோசகர்களை நியமிக்க சயாம் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது. அத்துடன் ஒரு நிபந்தனையையும் விதித்தது. அதாவது அத்தகைய ஆலோசகர்களைச் சயாமிய அரசுதான் நியமிக்கும்; மற்றபடி இங்கிலாந்து வெளியுறவு அமைச்சின் (Foreign Office) தலையீடு இருக்கக் கூடாது எனும் நிபந்தனை.
இருப்பினும் பின்னர் காலத்தில் அந்த இரு மாநிலங்களும் பிரித்தானிய ஆலோசகர்களை (ஆளுநர்கள்) ஏற்றுக் கொண்டன. இதைத் தொடர்ந்து கெடா மாநிலமும் பிரித்தானிய ஆளுநரை ஏற்றுக் கொண்டது.
சுவெட்டன்காமிற்கு ஓர் இறுதி இலக்கு இருந்தது. தாய்லாந்து; பட்டாணி மாநிலத்தின் தெற்குப் பகுதியைப் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் சுவெட்டன்காமின் அந்த இறுதி இலக்கு.
இருப்பினும் அவரின் அந்த இலக்கு இறுதி வரையில் வெற்றி பெறவில்லை. அவருக்கு அது ஒரு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.[6]
{{cite book}}
: Text "The Straits Settlements and Beyond" ignored (help)