தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பிரித்வி பங்கஜ் ஷா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 9 நவம்பர் 1999 தானே, மஹாராஷ்டிரா, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 293) | 4 அக்டோபர் 2018 எ. மேற்கிந்தியத்தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 18 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 231) | 5 பெப்ரவரி 2020 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 11 பெப்ரவரி 2020 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016/17–தற்போதுவரை | மும்பை துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–தற்போதுவரை | டெல்லி கேபிடல்ஸ் (squad no. 100) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 18 திசம்பர் 2020 |
பிரித்வி ஷா (Prithvi Shaw (பிறப்பு: நவம்பர் 9, 1999) [1] இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைவர் ஆவார். இவர் மும்பை துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்துள்ளார். மேலும் இவர் மும்பையில் உள்ள மிடில் ஏஜ் குரூப் துடுப்பாட்ட சங்கத்தில் விளையாடியுள்ளார். நவமபர் 2013 ஆம் ஆண்டில் 546 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் 1901 ஆம் ஆண்டில் இருந்து அனைத்துவடிவ துடுப்பாட்ட வடிவங்களிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். பின் சனவரி 4, 2016 இல் ஹாரிஸ் சீல்டு போட்டியில் பிரணவ் தனவதே இந்தச் சாதனையைத் தகர்த்தார்.[2]
இவர் வலதுகை மட்டையாளர் மற்றும் வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளர் ஆவார். சகலத் துறையரான இவர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படுகிறார்.[3]
இவரை மையப்படுத்தி பியாண்ட் ஆல் பவும்ம்ண்டரிஸ் எனும் விபரணத் திரைப்படம் எடுக்கப்பட்டது.[4] சனவரி 1, 2017 இல் நடைபெற்ற 2016-2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் மும்பை மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார்.[5] இது தான் இவர் முதல் முதல் தரத் துடுப்பாட்டம் ஆகும். இதன் இரண்டாவது ஆட்டப்பகுதியில் நூறு அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.[5] பின் துலீப் கோப்பைக்கான போட்டித் தொடரின் முதல் போட்டியிலும் நூறு அடித்தார்.இதன்மூலம் இரண்டு கோப்பை போட்டிகளின் அறிமுகப் போட்டிகளில் நூறு ஓட்டங்கள் அடித்த இரண்டாவது நபர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் இந்தச் சாதனையைப் படைத்தார். டிசம்பர் 2017 இல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[6] இந்தத் தொடரில் இவரின் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.
2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் 1.2 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது.[7][8] ஏப்ரல் 23, 2018 இல் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் அறிமுகமானார்[9]. இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலம் மிக குறைந்த வயதில் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். அப்போது அவருக்கு வயது 18 ஆண்டுகள் 165 நாள்கள் ஆகும். இந்தப்போட்டியில் துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 10 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார்.[10]
ஏப்ரல் 27, 2018 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐம்பது ஓட்டங்களை அடித்தார். இதன்மூலம் மிக குறைந்த வயதில் ஐம்பது ஓட்டங்கள் அடித்தவர் எனும் சாதனையை சஞ்சு சாம்சனுடன் பகிர்ந்தார்.[11] இந்தப் போட்டியில் 62 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிபெற உதவினார்.[12]
இந்திய உள்ளூர்ப் போட்டிகளில் பெருமையான கோப்பையாகக் கருதப்படும் ரிஸ்வி ஸ்பிரிங்ஃபீல்டு மற்றும் ஹாரிஸ் ஷீல்டு கோப்பைக்கான அணியின் தலைவராக இருந்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 155 ஓட்டங்களும், இறுதிப் போட்டியில் 174 ஓட்டங்களும் எடுத்தார்.[13] சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பயிற்சி எடுத்த மும்பையில் உள்ள மிடில் ஏஜ் குரூப் துடுப்பாட்ட சங்கத்தில் தான் இவரும் பயிற்சி எடுத்தார். ராஜீவ் பதக் இவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.[14]
இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2018 இல் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.[15] பின் மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம் 2018 தொடரில் வாய்ப்பு கிடைத்தது.[16] அக்டோபர் 4, 2018 இல் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[17] அதில் தனது முதலாவது நூறு ஓட்டங்களை அடித்தார். இதன்மூலம் மிக இளம் வயதில் (18 ஆண்டுகள் 329 நாட்கள்) அறிமுகப் போட்டியில் நூறு அடித்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[18] மிக இளம் வயதில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறுகள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)