பிரேன் குமார் பாசக்கு (Biren Kumar Basak) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நதியா மாவட்டத்தைச் [1][2] சேர்ந்த ஒரு கைத்தறி நெசவாளர் ஆவார்.[3][4] 1951 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றுள்ளார்.[5]
பிரேன் குமார் பாசக்கு தனது 13 ஆவது வயதில் மேற்கு வங்காளத்திலுள்ள புலியா நகரத்தில் நெசவாளராகப் பணிபுரிந்தார். பிரிவினைக்குப் பிறகு இவரது குடும்பம் தங்கைல் நகரத்திலிருந்து மேற்கு வங்காளத்திற்கு குடிபெயர்ந்தது.[6] 1970 ஆம் ஆண்டுகளில் தொடங்கி இவர் கைத்தறி புடவைகளை நெய்து கொல்கத்தாவில் வீடு வீடாக சென்று விற்பனை செய்து வந்தார். பாசக்கு ஒரு ரூபாயில் தனது தொழிலைத் தொடங்கினார். 2013 ஆம் ஆண்டில் கைவினைத்திறனுக்கான தேசிய விருதைப் பெற்றார். சத்யஜித் ரே, ஏமந்தா முகோபாத்யாய், மம்தா பானர்ச்சி, சவுரவ் கங்குலி, அம்சத் அலி கான், லதா மங்கேசுகர் மற்றும் ஆசா போசுலே[5] ஆகியோர் இவரது குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்களில் சிலராவர்.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)