பிலாபாண்ட் லா | |
---|---|
ஏற்றம் | 5,450 மீ (17,881 அடி) |
அமைவிடம் | இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது, பாகித்தான் பிரச்சனைக்குரியது[1][2] |
மலைத் தொடர் | கிழக்கு காரகோரம் மலைத்தொடர் |
ஆள்கூறுகள் | 35°23′N 76°57′E / 35.383°N 76.950°E |
பிலாபாண்ட் லா (Bilafond La) என்பது சால்டோரா முகட்டில் அமைந்திருக்கும் ஒரு மலைக் கணவாய் ஆகும். பட்டாம்பூச்சிகள் கணவாய், சால்டோரா கணவாய் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. மிகப்பரந்த சியாச்சின் பனிமலைக்கு மேற்கில் என் யே 980420 என்ற வரைபடப் புள்ளிக்கு நேர் வடக்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் இக்கணவாய் அமைந்துள்ளது.
1972-ல் இந்தியா மற்றும் [[பாக்கித்தான் இடையே ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு நாடுகளின் கட்டுப்பாட்டு கோட்டின் எல்லை முடிவாக இக்கணவாய் வரையறுக்கப்படுகிறது. மேலும், பிலாபாண்ட் லா கணவாய் பிரிக்கப்படாத இந்தியா மற்றும் சீனாவை இணைக்கும் தொண்மையான பட்டுச்சாலையின் மேல் அமைந்துள்ளது[3].
1984 -இல் இந்தியா மற்றும் பாக்கித்தான் இடையே சியாச்சின் கைப்பற்றல் காரணமாக துவங்கிய இராணுவ நடவடிக்கையில் இக்கணவாய் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது.
பிலாபாண்ட் லா கணவாயை இந்திய ராணுவம் 1984-இல் வடக்கில் சியா லா கணவாயுடன் சேர்த்துக் கைப்பற்றியது. மேலும் 1987-இல் தெற்கில் உள்ள கயாங் லா கணவாயையும் கைப்பற்றியது [2]. இந்தியா தற்பொழுது பிலாபாண்ட் லா-கணவாயில் தன்னுடைய இராணுவ மையம் ஒன்றை பராமரிக்கிறது [4].
சியாச்சின் பனியாறை பிடிக்கும் இந்திய இராணுவத்தின் மேகதூது இராணுவ செயல்முறையின் போது சியா லா கணவாய் மட்டுமல்லாது, அதன் அருகிலுள்ள கயாங் லா மற்றும் பிலாபாண்ட் லா கணவாய்களிலும் இராணுவ நடவடிக்கைகள் 1984- ஆம் ஆண்டில் துவங்கின. இது சியாசென் பூசலில் ஏற்பட்ட முதல் இராணுவ நடவடிக்கையும் மற்றும் மிகப் பெரிய காசுமீர் பூசலின் ஒரு பகுதியும் ஆகும். இந்த கணவாய்கள் அனைத்தும் தற்போது இந்தியா வசம் உள்ளது[5]. இது மிகப்பெரிய காசுமீர் பிரச்சனையின் ஒரு பகுதியாகும். இக்கணவாய் போர் திறன் சார்ந்த சியாச்சின் பகுதியின் மேற்கே மற்றும் இந்தியா – பாக்கித்தானின் தற்போதைய கோட்டின் அருகே அமைந்துள்ளதால் இந்திய ராணுவம் அவ்விடத்தை பாதுகாக்க எப்பொழுதும் அவ்விடத்தில் முகாமிட்டு இருக்கின்றது [6].
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)