பிளவோசான் கோயில் (Candi Plaosan) என்பது இந்தோனேசியாவின் கிளாப்டன் ரீஜென்சி, மத்திய ஜாவாவில் புகழ்பெற்ற இந்துக் கோயிலான பிரம்பானான் கோயிலின் வடமேற்கில் ஒரு கிலோமீட்டர் தொலைவில், புகீசன் கிராமத்தில் அமைந்துள்ள பௌத்தக் கோயில் ஆகும். இதனை 'பிளவோசான் வளாகம்' என்றும் அழைக்கப்படும் கேண்டி பிளவோசான் என்றும் அழைப்பர். [1]
பிளவோசான் கோயில், 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 148 மீட்டர் உயரத்தில், டெங்கோக் நதி அருகில் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில்வாழை, சோளம் போன்ற தாவரங்கள் மற்றும் நெல் வயல்களால் சூழப்பட்டு அமைந்துள்ளது.
இக்கோயில் 9 ஆம் நூற்றாண்டின் நடுவில் ஸ்ரீ காகுலுன்னன் அல்லது சமரத்துங்காவின் மகளான பிரமோதவர்த்தினி என்பவரால் கட்டப்பட்டது அவர் சைலேந்திர வம்சத்தின் சந்ததியைச் சேர்ந்தவர். அவர் ராகை பிகாடன் என்பருடன் இந்து மதம் பாரம்பரியப் படி திருமணம் செய்து கொண்டவர் ஆவார்.
பிளவோசான் வளாகம் தற்போது இரண்டு பௌத்தக் கோயில்களைக் கொண்டுள்ளது. அவை பிளவோசான் லோர் மற்றும் பிளவோசான் கிடுல் என்பனவாகும்[2] [3] [4]
அங்கு காணப்படுகின்ற கல்வெட்டுக்கள் மற்றும் பிளவோசான் மற்றும் கலாசன் சிலைகள் போன்றவை அக்கோயிலின் ஆரம்ப காலம், அந்த சிலைகளுக்கு இடையேயான உறவு, அப்பகுதியில் காணப்படுகின்ற மத சூழல் போன்றவை அவை எப்போது கட்டப்பட்டன என்பது தொடர்பான ஐயங்களை எழுப்பியுள்ளன. [5] [6] [7] [8]
கோயில்கள் ஒரு சாலையால் பிரிக்கப்பட்டுள்ளன; பிளவோசான் லோர் வடக்கிலும், பிளவோசான் கிடுல் தெற்கிலும் அமைந்துள்ளன. பிளவோசான் லோர் இரண்டு முக்கிய கோயில்களையும், மண்டபம் என்று அழைக்கப்படும் திறந்த பகுதியையும் கொண்டு அமைந்துள்ளது. இரண்டு கோயில்களிலும் நுழைவாயில், ஒரு வாயில், துவாரபாலர் எனப்படும் பாதுகாவலர் சிலை உள்ளது. முன்னர் பிளவோசான் லோர் மற்றும் பிளவோசான் கிடுல் இரண்டும் இணைந்து ஒரே கோயிலாக இருந்ததாகக் கருதுகின்றனர்.
பிளவோசான் கோயில் வளாகத்தில் 174 சிறிய கட்டிடங்கள், 116 ஸ்தூபங்கள் மற்றும் 58 சன்னதிகள் அல்லது சிறு கோயில்கள் உள்ளன. அவற்றில் பல கட்டிடங்களில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களின் இரு கல்வெட்டுகள் இந்தக் கோயில் ராகாய் பிகாடன் என்பவரால் கொடையாக வழங்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் தேதிகள் கி.பி 825 முதல் கி.பி.850 ஆம் ஆண்டுகளுக்கிடையேயானவையாக உள்ளன. ஒத்த என்றாலும் கி.பி. 856 காலத்திய பிரம்பானான் கோயிலைப் போன்று இருந்தாலும், வளாகத்தில் அவ்வாறான தொடர்பினைக் காணமுடியவில்லை. ஒரு புதிய கட்டிட உத்தியானது பிளவோசான் கோயில்களிலிருந்து பிரம்பானான் கோயில் வேறுபட்ட நிலையில் அமைந்துள்ளதை உணர்த்துகிறது.
புளூசனில் உள்ள முக்கிய கோயில்கள் மேல் நிலை மற்றும் கீழ் நிலைகளில் உள்ளன. அவை மூன்று அறைகளால் பிரிக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளன. கீழ் நிலையில் பல சிலைகள் இருந்துள்ளன. தற்போது ஒவ்வொரு அறையின் இருபுறங்களிலும் அமர்ந்திருக்கும் நிலையிலான போதிசத்துவர் சிலைகள் மட்டுமே உள்ன. அருகில் வெற்று பீடங்கள் உள்ளன. இருப்பினும், அங்கிருக்கின்ற ஜன்னல்களின் அமைப்பை வைத்து நோக்கும்போது மத்திய பீடத்திலோ, கீழ் நிலை பீடத்திலோ ஒரே ஒரு சிலை மட்டுமே இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதை அறியமுடிகிறது. தற்போது இந்த சிலையைக் காணமுடியவில்லை, இந்த சிலை பெரும்பாலும் வெண்கல புத்தராக இருந்திருக்கலாம். அந்த புத்தரின் இரு புறமும் கல்லால் ஆன இரு போதிசத்துவர் சிலைகள் இருந்திருக்கலாம். முதன்மைக் கோயிலில் ஆறு சிலைகள் இருந்திருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அவை ஆறு போதிசத்துவர் கல் சிலைகள் மற்றும் மூன்று வெண்கல புத்தர் சிலைகள் (தற்போது காணவில்லை) ஆகும். இதன் அடிப்படையில் நோக்கும்போது இங்குள்ள இரு முதன்மைக் கோயில்களில் 18 சிலைகள் இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
2006 ஆம் ஆண்டில் பிரம்பானனை பாதித்த பூகம்பம் பிளாசனை விட்டுவைக்கவில்லை. அப்போது அது சேதப்பட்டது. [9] [10] [11] இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது குறிப்பிடத்தக்க கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[12]
{{citation}}
: CS1 maint: numeric names: authors list (link)
{{citation}}
: Missing or empty |url=
(help)
{{citation}}
: Missing or empty |url=
(help)
{{citation}}
: Missing or empty |url=
(help)
{{citation}}
: Missing or empty |url=
(help)
{{citation}}
: Missing or empty |url=
(help)
பொதுவகத்தில் Candi Plaosan பற்றிய ஊடகங்கள்