சர் பூர்ணையா நரசிங்க ராவ் கிருட்டிணமூர்த்தி | |
---|---|
16ஆவது இந்திய சாம்ராஜ்யத்தின் ஒழுங்கின் தோழர் | |
பதவியில் 1901–1906 | |
ஆட்சியாளர் | நான்காம் கிருட்டிணராச உடையார் |
முன்னையவர் | தி. ஆர். ஏ. தம்புச் செட்டி |
பின்னவர் | வி. பி. மாதவ ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மைசூர் இராச்சியம் | 12 ஆகத்து 1849
இறப்பு | 1911 (அகவை 61–62) |
தொழில் | வழக்கறிஞர், ஆட்சிப்பணியாளர் |
சர் பூர்ணையா நரசிங்க ராவ் கிருட்டிணமூர்த்தி (Sir Purniah Narasinga Rao Krishnamurti) (1849 ஆகத்து12 - 1911) இவர் ஓர் இந்திய வழக்கறிஞரும் நிர்வாகியும் ஆவார். இவர் 1901 முதல் 1906 வரை மைசூர் இராச்சியத்தின் திவானாக பணியாற்றினார்.[1] இவர் மைசூரின் முதல் திவானான பூர்ணையா என்பவரின் நேரடி வம்சாவளியாக இருந்தார்.[2]
கிருட்டிணமூர்த்தி 1849 ஆகத்துட் 12 அன்று மைசூர் இராச்சியத்தில் பிறந்தார்.பெங்களூரில் கல்வி பயின்றார். பின்னர், மசென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற இவர் 1870 இல் மைசூர் அரச சேவையில் உதவி கண்காணிப்பாளராக சேர்ந்தார். உடையார் வம்சம் அரியணையை மீட்டெடுத்த பிறகு, கிருட்டிணமூர்த்தி 1901 இல் திவானாக நியமிக்கப்படுவதற்கு முன்பு தலைமை நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். 1905 ஆகத்து 3 அன்று, இவர் திவானாக இருந்தபோது, பெங்களூரில் மின்சார விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன (மின்சார தெரு விளக்குகளைப் பெற்ற இந்தியாவின் முதல் நகரம்). ஏலந்தூர் ஏலந்தூர் தோட்டத்தின் ஐந்தாவது ஜாகிர்தாரும் ஆவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.