பிரஜ் பாசி லால் | |
---|---|
The Minister of State for Culture (IC) and Environment, Forest & Climate Change, Dr. Mahesh Sharma releasing the book by the former DG, ASI, Prof. B.B. Lal, on the occasion of Foundation Day of National Museum, in New Delhi. | |
பிறப்பு | பிரஜ் பாசி லால் 2 மே 1921 ஜான்சி, உத்தரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
பணி | தலைமை இயக்குநர் (1968 - 1972), இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தொல்லியல் அறிஞர் |
அறியப்படுவது | சிந்துவெளி நாகரிகத்தின் காளிபங்கான் தொல்லியல் களம், மகாபாரத நிகழிடங்கள், இராமாயண நிகழிடங்கள் |
பிரஜ் பாசி லால் அல்லது பி பா லால் (Braj Basi Lal) (பிறப்பு: 2 மே 1921[1]) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1968 முதல் 1972 முடிய பணியாற்றியவர். பின்னர் ஓய்வுக்கு பிறகு சிம்லாவில் உள்ள இந்திய உயர் படிப்பு நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார். மேலும் யுனெஸ்கோவின் பல்வேறு குழுக்களில் இணைந்து பணியாற்றியவர்.[2]2000-ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது பெற்றவர்.[2]
சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்களில் ஒன்றான இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காளிபங்கான் தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்தவர். சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[3]
இவர் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி வளாகத்தை அகழ்வாய்வு செய்து, 2008-இல் எழுதிய Rāma, His Historicity, Mandir and Setu: Evidence of Literature, Archaeology and Other Sciences எனும் நூலில் கீழ் வருமாறு கூறுகிறார்:
"பாபர் மசூதியின் அடித்தளத்தை தாங்கும் 12 தூண்கள் இந்து கட்டிட கலைநயம் கொண்டதுடன், இந்துக் கடவுள்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தூண்கள் பாபர் மசூதியின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல; இத்தூண்கள் பாபர் மசூதிக்கு அந்நியமானது."[4]
பி. பி. லால் தமது 101வது அகவையில் உடல்நலக்குறைவால் லக்னோவில் 10 செப்டம்பர் 2022 அன்று காலமானார்.[5]
{{cite web}}
: Check date values in: |access-date=
(help); Cite has empty unknown parameter: |dead-url=
(help)