Other name | PPGIT |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 2008 |
முதல்வர் | முனைவர் ஆர். பிரகாசம் |
அமைவிடம் | , , |
சுருக்கப் பெயர் | PPGIT |
இணையதளம் | http://www.ppgit.com/ |
பி. பி. ஜி. தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (PPG Institute of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியானது 2008-2009 கல்வியாண்டில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த கல்லூரி விளாங்குறிச்சி, சரவணம்பட்டி (அஞ்சல்), ரத்தினகிரி சாலை, சத்தி சாலை (தே.நெ -209)யில் இருந்து 300 மீட்டர் தொலைவு, கோயம்புத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. [1]
இக்கல்லூரியானது இளங்கலை பொறியியல் (பி.இ) படிப்பில் ஆறு படிப்புகளையும், இளநிலை தொழில்நுட்ப (பி.டெக்.) பிடிப்பில் ஒரு படிப்பையும் வழங்குகிறது.
பி.இ.
இளநிலை படிப்புக்கான மாணவர்கள் அவர்களின் 12 ஆம் வகுப்பு (உயர்நிலை பள்ளி) மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். சேர்க்கையானது தமிழக அரசின் விதிமுறைகளின்படி மாநில அரசின் கலந்தாய்வு (டி.என்.இ.ஏ) மற்றும் நிர்வாக இடங்களானது ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறைகள் மூலம் சேர்க்கப்படுகின்றனர்.