புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி

புக்கிட் கந்தாங் (P059)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Bukit Gantang (P059)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி

(P59 Bagan Serai)
மாவட்டம்லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை94,253 (2022)[1]
வாக்காளர் தொகுதிபுக்கிட் கந்தாங் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்புக்கிட் கந்தாங், சங்காட் ஜெரிங், புக்கிட் மேரா, புக்கிட் மேரா (கிந்தா), புக்கிட் மேரா (கிரியான்), தைப்பிங், ஓராங் ஊத்தான் தீவு
பரப்பளவு833 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி சுயேச்சை
மக்களவை உறுப்பினர்சையத் அபு அசின் அபீஸ் சையத் அபு பசல்
(Syed Abu Hussin Hafiz Syed Abu Fasal)
மக்கள் தொகை107,813 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (72.0%)
  சீனர் (19.1%)
  இதர இனத்தவர் (0.2%)

புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bukit Gantang; ஆங்கிலம்: Bukit Gantang Federal Constituency; சீனம்: 武吉干当国会议席) என்பது மலேசியா, பேராக், கிரியான் மாவட்டத்தில் (Kerian District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P059) ஆகும்.[6]

புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து பாகன் செராய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

புக்கிட் கந்தாங்

[தொகு]

புக்கிட் கந்தாங் நகரம் பேராக் மாநிலத்தின், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய சுண்ணாம்புக் குன்றுகளும் சுண்ணாம்பு மலைகளும் உள்ளன.

ஈப்போ மாநகரில் இருந்து 69 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. மலேசியாவின் மிக நீளமான தொடருந்துச் சுரங்கங்களில் ஒன்றான புக்கிட் பெராப்பிட் தொடருந்து சுரங்கம் இங்குதான் உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைக்கு அருகில் புக்கிட் கந்தாங் உள்ளது.

லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்

[தொகு]

புக்கிட் கந்தாங் நகரத்திற்கு அருகில் உள்ள நகரங்கள்: சங்காட் ஜெரிங்; கம்போங் செ; மாத்தாங்; பாடாங் ரெங்காஸ்; கோலா சபெத்தாங்.[7] இந்தப் பகுதி ஒரு வேளாண் பகுதியாகும். குறிப்பாக நெல், ரப்பர், செம்பனை மற்றும் பழ மரங்கள் பயிர் செய்யப் படுகின்றன. புக்கிட் கந்தாங்கிற்கு 'வெப்பமண்டலப் பழக் கிராமம்' (Tropical Fruit Village) எனும் புனைப்பெயரும் கிடைத்து உள்ளது.[8] இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர்ர் மலாய்க்காரர்கள்.

லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தின் தலைப்பட்டணமாக தைப்பிங் விளங்குகிறது. லாருட், மாத்தாங், செலாமா ஆகிய மூன்று சிறு மாவட்டங்களும், இந்த மாவட்டத்தின் மூலமாக ஓர் ஐக்கிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு 1850-களில் இருந்து அதன் வரலாறு தொடங்குகிறது. இந்த மாவட்டத்தில் தான் மலாயாவின் முதல் தொடருதுச் சேவை தைப்பிங்கில் இருந்து கோலா சபெத்தாங் வரை தொடங்கப்பட்டது.

புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி

[தொகு]
புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் மாத்தாங் மக்களவைத் தொகுதியில் இருந்து
புக்கிட் கந்தாங் தொகுதி உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P053 1986–1990 அப்துல்லா பட்சில் செ வான்
(Abdullah Fadzil Che Wan)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P056 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P059 2004–2008 தான் லியான் கோ
(Tan Lian Hoe)
பாரிசான் நேசனல்
(கெராக்கான்)
12-ஆவது மக்களவை 2008–2009 ரோஸ்லான் சாரும்
(Roslan Shaharum)
பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
2009–2013 நிஜார் ஜமாலுதீன்
(Mohammad Nizar Jamaluddin)
13-ஆவது மக்களவை 2013–2018 இட்ரிஸ் அகமது
(Idris Ahmad)
14-ஆவது மக்களவை 2018 சையது அபு உசேன் அபீஸ்
(Syed Abu Hussin Hafiz)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
2018–2020 சுயேச்சை
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–2024
2024–present சுயேச்சை

புக்கிட் கந்தாங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
94,253
வாக்களித்தவர்கள்
(Turnout)
72,735 75.93% - 6.89%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
71,567 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
135
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1,033
பெரும்பான்மை
(Majority)
12,756 17.83% Increase + 10.64
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[9]

புக்கிட் கந்தாங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
சையத் அபு அசின் அபீஸ்
(Syed Abu Hussin Hafiz)
பெரிக்காத்தான் 71,567 32,625 45.59% + 45.59% Increase
முகமது சொலேகின் தாஜி
(Mohammad Sollehin Mohamad Tajie)
பாரிசான் - 19,869 27.76% - 11.72 %
பக்ருல்தீன் முகமது அசீம்
(Fakhruldin Mohd Hashim)
பாக்காத்தான் - 18,565 25.94% - 6.35%
முகமது சுக்ரி முகமது யூசோப்
(Mohd Shukri Mohd Yusoff)
தாயக இயக்கம் - 508 0.71% + 0.71% Increase

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 2 ஜூன் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. Bukit Gantang merupakan Mukim dalam Daerah Taiping Negeri Perak Darul Ridzuan. Mukim Bukit Gantang terletak di bawah pentadbiran Larut Matang dan Selama.
  8. Kawasan ini merupakan kawasan pertanian khususnya padi sawah, getah, kelapa sawit dan buah-buahan. Bukit Gantang mendapat julukan 'Tropical Fruit Village'.
  9. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]