புக்கிட் குளுகோர் (P051) மலேசிய மக்களவைத் தொகுதி பினாங்கு | |
---|---|
Bukit Gelugor (P051) Federal Constituency in Penang | |
மாவட்டம் | வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் பினாங்கு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 117,393 (2023)[1] |
வாக்காளர் தொகுதி | புக்கிட் குளுகோர் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | ஜார்ஜ் டவுன், பினாங்கு; குளுகோர், தாசேக் குளுகோர், புவா பாலா கிராமம், பத்து உபான், ஜெலுத்தோங் |
பரப்பளவு | 32 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | ராம் கர்ப்பால் சிங் (Ramkarpal Singh) |
மக்கள் தொகை | 201,005 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bukit Gelugor; ஆங்கிலம்: Bukit Gelugor Federal Constituency; சீனம்: 敦拉萨镇国会议席) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P051) ஆகும்.[6]
புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் நகரம், மாவட்டத்தின் பெரிய நகரமாகவும்; பினாங்கு மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. பினாங்குத் தீவின் வடகிழக்குப் பாதியை இந்த வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் உள்ளடக்கியது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு: 122.79 கி.மீ. (47.41 சதுர மைல்).
புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2003-ஆம் ஆண்டில் புக்கிட் பெண்டேரா; பாயான் பாரு மக்களவைத் தொகுதிகளில் இருந்து புக்கிட் குளுகோர் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P051 | 2004–2008 | கர்பால் சிங் (Karpal Singh) |
ஜனநாயக செயல் கட்சி |
12-ஆவது மக்களவை | 2008–2013 | பாக்காத்தான் ராக்யாட் ஜனநாயக செயல் கட்சி | ||
13-ஆவது மக்களவை | 2013–2014 | |||
2014–2018 | ராம் கர்ப்பால் சிங் (Ramkarpal Singh) | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் ராக்யாட் ஜனநாயக செயல் கட்சி | ||
15-ஆவது மக்களவை | 2022–present |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
117,134 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
91,217 | 76.90% | ▼ - 6.61% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
86,073 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
339 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,170 | ||
பெரும்பான்மை (Majority) |
63,112 | 73.33% | ▼ - 0.58 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
மலேசிய அரசாங்க அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613); [7]சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
ராம் கர்ப்பால் சிங் (Ramkarpal Karpal Singh) |
பாக்காத்தான் | 93,021 | 71,204 | 82.73% | - 3.95 % ▼ | |
தினகரநாபன் பத்மநாபன் (Thinagaranabhan Padmanabhan) |
பெரிக்காத்தான் | - | 8,092 | 9.40% | + 9.40% | |
வோங் சின் சோங் (Wong Chin Chong) |
பாரிசான் | - | 6,777 | 7.87% | - 4.90% ▼ |