புக்கிட் செலம்பாவ் | |
---|---|
Bukit Selambau | |
கெடா | |
ஆள்கூறுகள்: 5°40′N 100°37′E / 5.667°N 100.617°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | கோலா மூடா |
நாடாளுமன்றம் | மெர்போக் மக்களவை தொகுதி |
நகரத் தோற்றம் | 1900-களில் |
நேர வலயம் | மலேசிய நேரம் |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 10xxx |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | K |
புக்கிட் செலம்பாவ் (மலாய்: Bukit Selambau; ஆங்கிலம்: Bukit Selambau; சீனம்: 武吉雪兰堡) என்பது மலேசியா, கெடா மாநிலத்தின், கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District) உள்ள ஒரு சிறு நகரம்; சுங்கை பட்டாணி (Sungai Petani) நகரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்தக் கிராமப்புற நகரம் மெர்போக் நாடாளுமன்றத் தொகுதிக்குள் (Merbok Federal Constituency) அமைந்துள்ளது. புக்கிட் செலாம்பாவின் பொருளாதார செயல்பாடுகள் பெரும்பாலும் பயிர்த் தோட்டங்கள் மற்றும் வேளாண்மைத் துறையை அடிப்படையாகக் கொண்டவை.
கோலா மூடா மாவட்டம் கெடா மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டம் ஆகும். மலேசியாவில் புரதான நாகரிகங்கள் தோன்றிய இடமாகவும் இந்த இடம் கருதப் படுகிறது.[1]
மலேசியாவில் புகழ்பெற்ற ஜெராய் மலை இந்த மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மூடா ஆறு இந்த மாவட்டத்தையும் பினாங்கு மாநிலத்தையும் பிரிக்கிறது.
பினாங்கு பாலம் இந்த மாவட்டத்தின் தீக்காம் பத்துவையும் பினாங்கு மாநிலத்தின் பும்போங் லீமா எனும் இடத்தையும் இணைக்கின்றது.
இந்த மாவட்டம் கெடா, பினாங்கு மாநிலங்களின் எல்லைக்கு அருகாமையில் உள்ளது. தீக்காம் பத்து, பாடாங் தெம்புசு, சுங்கை லாலாங், பீடோங், சீடாம், குரூண், செமெலிங், மெர்போக், கோத்தா கோலா மூடா, தஞ்சோங் டாவாய் ஆகியவை கோலா மூடா மாவட்டத்தில் உள்ள இதர நகரங்கள் ஆகும்.
டத்தோ வி. ஆறுமுகம் (Arumugam Vengatarakoo) 2008 தொடங்கி 2009 வரை புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதிக்கான கெடா மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.
2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் கெடா மாநிலத்தின் புதிய பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) கூட்டணி அரசாங்கத்தில் மக்கள் நீதிக் கட்சியில் (People's Justice Party) இணைந்தார்.
கெடா மாநிலத்தில் இந்தியச் சமூகத்தை மாநில அரசாங்கத்தில் பிரதிநிதிக்க இவர் மாநில ஆட்சிக் குழுவில் நியமிக்கப்பட்டார். இருப்பினும், பிப்ரவரி 2009-இல், இவர் நிர்வாகக் குழு மற்றும் மாநில சட்டமன்றத்தில் இருந்து தம் பதவிகளைத் துறப்பு செய்தார். இதன் விளைவாக அங்கு ஓர் இடைத் தேர்தல் நடைபெற்றது.[2][3]
அரசியலுக்கு வருவதற்கு முன், வி. ஆறுமுகம் அரச மலேசிய விமானப் படையில் சேவை செய்தவர் ஆகும்.
ஆண்டு | எதிரணி | வாக்குகள் | % | பாரிசான் நேசனல் | வாக்குகள் | % | ||
---|---|---|---|---|---|---|---|---|
2008 | வி. ஆறுமுகம் (சுயேச்சை) | 13,225 | 51% | எஸ். கிருஷ்ணன் (ம.இ.கா) | 10,863 | 42% |