புக்கிட் பூங்கா

புக்கிட் பூங்கா
Bukit Bunga
நகரம்
புக்கிட் பூங்கா is located in மலேசியா
புக்கிட் பூங்கா
புக்கிட் பூங்கா
      பாசீர் பூத்தே
ஆள்கூறுகள்: 5°50′15″N 101°54′10″E / 5.83750°N 101.90278°E / 5.83750; 101.90278
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம் தானா மேரா மாவட்டம்

புக்கிட் பூங்கா (மலாய் மொழி: Bukit Bungah; ஆங்கிலம்: Bukit Bunga) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில், மலேசியா-தாய்லாந்து எல்லையில், ஓர் எல்லைக் கிராமப்புற நகரம்.

இந்த நகரத்தில் ஓர் எல்லைப் பாலம் உள்ளது. அதன் பெயர் புக்கிட் பூங்கா - பான் புக்கேட்டா பாலம் (Bukit Bunga-Ban Buketa Bridge). மலேசியா - தாய்லாந்து எல்லையை இணைக்கும் இந்தப் பாலம், 2007 டிசம்பர் 21-ஆம் தேதி திறக்கப்பட்டது.[1]

பொது

[தொகு]

இந்த நகரத்தின் எல்லைக்கு அருகில் தாய்லாந்தின் நாராதிவாட் மாநிலத்தின் (Narathiwat Province) பான் புக்கேடா (Ban Buketa) நகரம் உள்ளது.

இந்த நகரம், கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் (East-West Highway) இருந்து 30 கி.மீ. அப்பால் தானா மேரா நகரத்திற்குச் செல்லும் வழியில் உள்ளது. இந்த இடம் பல சிறிய கிராமங்களைக் கொண்டது.

அவற்றில் முக்கியமான கிராமங்கள்:

  • புக்கிட் நங்கா - Bukit Nangka
  • செடோக் - Cedok
  • டோக்பே - Tokpe
  • கம்போங் புக்கிட் - Kampung Bukit
  • ரெனாப் - Renab
  • செனுபு - Jenub

வரலாறு

[தொகு]

புக்கிட் பூங்கா கடந்த சில பத்தாண்டுகளாக, மலேசியாவில் இருந்து தாய்லாந்துக்குள் நுழையும் ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது.

மிக ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்து இருக்கும் இந்த நகரத்திற்கு 1981-ஆம் ஆண்டில் ஒரு காவல் நிலையம் கட்டித் தரப்பட்டது. இங்கு ஒரு சுங்கத் துறை மற்றும் குடிவரவுத் துறை கட்டடமும் உள்ளது.

அண்மைய காலங்களில், தாய்லாந்து நாட்டுப் பொருட்களைத் தேடிச் செல்லும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் மையமாகவும் மாறியுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]