புனித பரலோக மாதா திருத்தலம் மலேசிய மாநிலமான பினாங்கில் உள்ள ஜார்ஜ் டவுனுக்குள் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். 1786 ஆம் ஆண்டில் ஜார்ஜ் டவுன் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து நிறுவப்பட்ட இது மலேசியாவின் மூன்றாவது பழமையான கத்தோலிக்க தேவாலயமாகும்.[1] 1955 முதல் 2003 வரை பினாங்கு ஆயரின் இருக்கையாகவும் இந்த தேவாலயம் இருந்தது.