புருசோத்தம தேவன் | |
---|---|
கஜபதி | |
![]() கஜபதி புருசோத்தம தேவன், காஞ்சி அபிஞானம் மற்றும் மாணிக்கியாவின் ஒடியா நாட்டுப்புறக் கதைகளின்படி, புரி ஜெகன்நாதர் கோயில் சுவர் ஓவியத்தில் சித்தரிக்கப்படுகிறார். | |
2வது கஜபதி பேரரசர் | |
ஆட்சிக்காலம் | 1467 – 1497 கி.பி |
முன்னையவர் | கபிலேந்திர தேவன் |
பின்னையவர் | பிரதாபருத்ர தேவன் |
இறப்பு | 1497 கி.பி |
துணைவர் | பத்மாவதி |
மரபு | சூரிய குலம் |
தந்தை | கபிலேந்திர தேவன் |
தாய் | பார்வதி தேவி |
மதம் | இந்து சமயம் |
வீர பிரதாப புருசோத்தம தேவன் ( Vira Pratapa Purushottama Deva) கி.பி. 1467 முதல் 1497 முதல் ஆட்சி செய்த இரண்டாவது கஜபதி பேரரசர் ஆவார்.[1] இவரது தந்தை கஜபதி கபிலேந்திர தேவன் ரௌதராயன் தனது வாரிசாக இவரைத் தேர்ந்தெடுத்தார். இவர் வெற்றிகரமான போர்வீரராக இருந்தார். மேலும், தனது தந்தையின் விருப்பப்படி விஜயநகரப் பேரரசுக்கு எதிரான போரில் வெற்றிகரமாக ஈடுபட்டார்.
புருசோத்தம தேவன், பதினாறாம் நூற்றாண்டில் கவிஞர் புருசோத்தம தாசன் எழுதிய காஞ்சி காவேரி உபாக்கியனா (கவிதை) புராணத்தின் முக்கிய கதாபாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.[2] பின்னர் இது வங்காள கவிஞர் ரங்கலால் பந்தோபாத்யாயினால் வங்காள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.[3] இந்த புராணக்கதை ஒடிசாவின் ஜெகந்நாதர் வழிபாட்டு பாரம்பரியத்தின் இந்து பக்தர்களிடையே பிரபலமானது.
பேரரசர் கபிலேந்திர தேவனின் மூத்த மகனான பட்டத்து இளவரசர் கம்வீர தேவன், புருசோத்தமனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்.[4] கட்டக்கின் பராபதி கோட்டையில் புருசோத்தமன் இராணுவ ரீதியாக பலமாக இருந்தார். ஆளும் குடும்பத்தின் இந்த உள் மோதலைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் விஜயநகரத்தின் சாளுவ நரசிம்மர், கொண்டப்பள்ளி மற்றும் ராஜமகேந்திரவரம் போன்ற கஜபதி பேரரசின் சில பகுதிகளைத் தாக்கி கைப்பற்றினார்.[5]