புலிந்தர்கள் (Pulindas) (சமஸ்கிருதம்: पुलिंद) பண்டைய பரத கண்டத்தின் மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடர்களில் வாழ்ந்த மலைவாழ் இன மக்கள் ஆவார்.[1] அசோகரின் தூண்களில் (கி மு 269 - 231) புலிந்தர்களையும், அவர்களது தலைநகரமான புலிந்த நகரத்தையும், அதனருகில் வாழ்ந்த வேற்று இன மக்களையும் குறித்துள்ளது. புலிந்த நகரம், தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[2] புலிந்தர்களை, விந்திய மலைத்தொடர்கள் மற்றும் சாத்பூரா மலைத்தொடர்களில் வாழும் மலைவாழ் பழங்குடியினரான பில் மக்களாக இருக்கலாம் என கருதுகிறார்கள்.[3]
புலிந்தர்கள், இமயமலை மற்றும் அசாம் மலைப்பகுதிகளில் வாழ்ந்த கிராதர்களுடன் தொடர்புடைய மலைவாழ் பழங்குடி மக்கள் என்றும் சிலர் கருதுகின்றனர்.[4]
குருச்சேத்திரப் போரில், புலிந்தர்கள் ஈட்டி, வில், அம்புகளுடன், கௌரவர் அணி சார்பாக போரிட்டனர்.
... Pulindas who are invariably associated with the Nerbudda (Reva) and the Vindhyan region ...
... in Rock Edict XIII ... we have to place them somewhere to the north or the north-east of the Andhras ... In the Vayu-Purana, the southern branch of the Pulindas has been placed side by side with the Vindhya-muliyas ... their capital is mentioned as Pulinda-nagara and their kingdom as contiguous with the Chedi country ... the Jubbulpur District ...
... The Pulindas were a hill tribe usually connected with the Vindhyan range. Partiger notices several branches of the Pulinda tribe, viz. (1) a western branch, (2) a Himalayan branch related to the Kiratas and Tanganas, and (3) a southern branch ...