புலிமுருகன் | |
---|---|
இயக்கம் | வைசாக் |
தயாரிப்பு | டோமிச்சன் முலகுப்படம் |
கதை | உதயகிருஷ்ணா |
இசை | கோபி சுந்தர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஷாஜி குமார் |
படத்தொகுப்பு | ஜான்குட்டி |
கலையகம் | முலகுப்படம் பிலிம்ஸ் |
விநியோகம் | முலகுப்படம் ரிலீஸ் |
வெளியீடு | 7 அக்டோபர் 2016(இந்தியா) |
ஓட்டம் | 162 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹25 கோடி[1][2] |
மொத்த வருவாய் | மதிப்பீடு.₹152 கோடி[3] |
புலிமுருகன் (Pulimurugan) என்பது 2016 ஆண்டைய இந்திய மலையாள-மொழி அதிரடி சாகசத் திரைப்படமாகும். வைசாக் இயக்கிய இப்படத்தை முலகுப்படம் பிலிம்ஸ் மூலமாக டோமிச்சன் முலகுப்படம் தயாரித்துள்ளார். திரைக்கதையை உதயகிருஷ்ணா எழுதியுள்ளார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கமலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, லால், வினு மோகன், பாலா. போன்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளன்ர, படத்தின் ஒலிப்பதிவு கோபி சுந்தராலும், ஒளிப்பதிவு ஷாஜி குமாராலும், படத்தொகுப்பு ஜான் குட்டியாலும் செய்யப்பட்டுள்ளது.
படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு வியட்நாமின், ஹனோயில் 2015 சூலை 16 அன்று துவங்கி அன்று துவங்கியது. படத்தின் படப்பிடிப்பு 2016 பிப்ரவரியில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து படமானது இந்தியாவில் 2016 அக்டோபர் 7 அன்று வெளியானது. ₹25 கோடி, செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது, மலையாளத் திரையுலகில் ₹100 கோடியைத் தாண்டி ₹150 கோடிவரை, வசூலீட்டிய முதல் திரைப்படமாகும். மேலும் இது 2016 ஆண்டில் தென்னிந்திய மொழிகளில் அதிக வசூலை வாரிக் குவித்த மூன்றாவது படமாகும். இப்படம் 2016 திசம்பர் 2 அன்று மன்யம்புலி என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றப் பதிப்பு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் 500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
90 வது அகாடமி விருதுகளில், அகடாமி அவார்ட் பார் பெஸ்ட் ஒரிஜினல் சாங் விருதுக்கு போட்டியாக தேர்வு செய்யப்பட்ட 70 பாடல்களில் இப்படத்தின் இரண்டு பாடல்களான—"காதணியும் கால்சிலம்பே" மற்றும் "மானதே மாரிக்குறும்பே" போன்றவை இடம்பெற்றன.[4] சிறந்த ஸ்கோர் பரிந்துரைக்கான அகாடெமி விருதுக்கு போட்டியிட்ட 141 தகுதி மதிப்பெண்களில் இந்த படம் பெற்றது.[5]
மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உள்ள கிராமங்களில் ஒன்று புலியூர். அங்கு வாழும் மனிதர்களை அவ்வப்போது அடித்துக் கொல்கின்ற புலிகள். அப்படி ஒரு புலியிடம் தன் தந்தையை கண்முன்னே இழக்கிறான் முருகன். அந்தப் புலியைத் தன் மாமாவான பலராமன் துணையுடன் வேலில் குத்திக் கொல்கிறான். அன்று முதல் அவனைப் புலிமுருகன் என்று கொண்டாடுகின்றனர் மக்கள்.
வளர்ந்து பெரியவனான பிறகும், எந்த மலைக் கிராமத்தில் புலித் தொல்லை என்றாலும் புலிமுருகன்தான் அந்த மக்களைக் காப்பாற்றுகிறான். புலிமுருகனுக்கு நகரத்தில் கல்லூரியில் படிக்கும் தம்பியான முனிகுட்டன் மேல் அளவு கடந்த பாசம். ஒரு முறை தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு பாலா என்பவர் உள்ளிட்ட மூன்று பேர் புலியூருக்கு வருகின்றனர். புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க தாதா ஜெகபதி பாபு வைத்துள்ள நிறுவனத்துக்கு கொஞ்சம் கஞ்சா வேண்டும் எனக் கேட்கின்றனர். தம்பியின் நண்பர்கள், புற்றுநோய்க்கு மருந்து மற்றும் தம்பிக்கும் இதில் வேலை கிடைக்கும் என்பதால் உடனே ஒப்புக் கொள்கிறான் புலிமுருகன். கஞ்சாவை தனது சரக்குந்தில் ஏற்றிக் கொண்டு போகும்போது காவல் துறையினர் மடக்க, அவர்களுக்கு போக்குக் காட்டிவிட்டு கஞ்சாவுடன் தப்பிக்கிறான் புலிமுருகன். அதை தாதா ஜெகபதிபாபுவிடம் பத்திரமாக ஒப்படைக்கிறான். வனத்துறை அதிகாரியான ஆர். கேவை (கிஷோர்) தாக்கிய வழக்கில் இருந்து புலிமுருகனைக் காப்பதாக பாலாவின் தந்தையான ஜெகபதி பாபு வாக்களிக்கிறார். அதனால் அவரது விருந்தினர் மாளிகையிலேயே முருகன் தன் மனைவி, குழந்தையுடன் தங்கிவிடுகிறார். புலிமுருகனின் தைரியம், எதற்கும் அஞ்சாத குணம் ஜெகபதி பாபுவுக்குப் பிடித்துவிடுகிறது. முருகனின் தம்பிக்கு ஜெகபதி பாபு தன் நிறுவனத்திலேயே வேலை போட்டுக் கொடுக்கிறார், ஆனால் கொஞ்ச நாளிலேயே முருகனைச் சுற்றி வளைக்கும் காவல்துறை ஜெகபதி பாபு போதை மருந்து தயாரிக்கும் உண்மையையும், அவரைப் பிடிக்க உதவினால் அவரையும் அவரது தம்பியையும் இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் கூறுகின்றது. முருகன் இதற்கு உதவி செய்ய இந்த களபரத்தில் ஜெகபதி பாபுவின் மகனான பாலா உயிரிழக்கிறார். ஜெகபதி பாபு காவல் துறையிடமிருந்து தப்பிக்கிறார். ஊர் திரும்பும் முருகனிடம் ஊரில் ஒரு புலி மனிதர்களை அடித்துக் கொல்வதாக முறையிடுகின்றனர். இதனோடு ஜெகபதி பாபு தன் கூட்டாளிகளுடன் காட்டில் முருகனைக் கொல்ல காத்திருப்பதும் முருகனுக்குத் தெரிகிறது. இந்த இரண்டு ஆபத்துகளையும் எதிர்த்து நின்று புலிமுருகன் எப்படி வெல்கிறான் என்பதே கதையின் மீதி.