மிட்டாய் இளவரசி என்றும் அழைக்கப்படும் புவனேசுவரி குமாரி இராசத்தானின் அல்வார் அரச குடும்பத்தில் பிறந்தார். மகாராசா தேச் சிங் பிரபாகர் பகதூரின் பெயர்த்தியாகவும் இவர் அறியப்படுகிறார்.[2] குமாரி தில்லி பல்கலைக்கழகத்தில் படித்தார் .
1977 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை புவனேசுவரி குமாரி தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் பெண்கள் தேசிய சுவர்ப்பந்து விளையாட்டு வெற்றியாளராக இருந்தார்.[3]
41 மாநில பட்டங்கள் மற்றும் இரண்டு பன்னாட்டு பட்டங்களை புவனேசுவரி வென்றுள்ளார். குறிப்பாக கென்ய நாட்டின் திறந்தநிலை போட்டிகள் 1988 மற்றும் 1989 ஆகியனவாகும்.
தில்லி விளையாட்டு பத்திரிக்கையாளர் சங்க விருது (1983 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு பெண்)
இராசத்தான் விளையாட்டு விருதுக் குழு 1984
மகாராணா மேவார் அறக்கட்டளை "ஆரவளி விருது" (1990 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரருக்கு)
கே.கே. பிர்லா அறக்கட்டளை விளையாட்டுக்கான விருது (1991 இல் சிறந்த செயல்திறனுக்காக)
பாம்பே விளையாட்டுப் பத்திரிகையாளர்கள் சங்க விருது (1992 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரருக்காக)
லிம்கா சாதனைப் புத்தகத்தில் புவனேசுவரியின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது (1992 ஆம் ஆண்டின் விளையாட்டு நபருக்காகவும் மற்றும் இந்திய விளையாட்டுகளில் அதிக பட்டங்களை வென்றதர்க்காகவும்)
இராசத்தான் ஒலிம்பிக் சங்க விருது - மிகச்சிறந்த பெண் விளயாட்டு வீரர் 1993 – 94
விளங்குபவர்களுக்கான மகாராசா சவாய் மாதோ சிங் விருது
↑"Padma Awards"(PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original(PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.