புவாங் மாலை

பல்வேறு கட்டங்களில் நிறைவடையும் புவாங் மாலை.
பாக் குளோங் தலத்தில் உள்ல கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புவாங் மாலை.

புவாங் மாலை (Phuang malai, தாய் மொழி: พวงมาลัย ) என்பது தாய்லாந்து நாட்டின் அலங்கார வடிவமைப்புடைய மலர் மாலை வடிவம். ஆகும். அவை பெரும்பாலும் நல்ல அதிர்ஷ்டத்திற்காவும், காணிக்கையாகவும் வைக்கப்படுகின்றன.

தோற்றுவாய்கள்

[தொகு]

புவாங் மாலையை முதலில் உருவாக்கியவர் யார் என்பதற்கு எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இல்லை. புவாங் மாலை அரசர் சுலாலாங்கார்ன் ஆட்சிகாலத்தில் புவாங் மாலைகள் இருந்ததாக குறிப்புகள் உள்ளன.[1] சுகோத்தாய் இராச்சியத்தில் நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட பன்னிரண்டு மாத அரச விழாக்கள் (பரா ராட்ப்கிதி சிப் சாங் டியூன் ) என்ற மன்னர் எழுதிய ஒரு இலக்கியப் படைப்பு இருந்தது. 4 வது மாத விழாவில், மன்னரின் தலைமைத் துணையமைச்சர் தாவோ சிச்சுலலக் (ท้าว by) புதிய மலர் மாலைகளைத் தயாரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] பின்னர், இரத்தனகோசின் இராச்சியத்தில் புவாங் மாலை ஒவ்வொரு விழாவிலும் ஒரு முக்கியமான அலங்கார பொருளாக மாறியது. அரண்மனையில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் புவாங் மாலை தயாரிக்கும் திறன்களைப் பெறவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராணி சவோபா போங்ஸ்ரீ பல்வேறு சிக்கலான வடிவமைப்புகளைப் புகுத்தி புவாங் மாலைகளை உருவாக்கினார்.

வடிவங்கள்

[தொகு]

புவாங் மலாய் வடிவங்களை ஆறு குழுக்களாகப் பிரிக்கலாம்.

  1. உயிரின மாலை என்பது விலங்குகளின் தோற்றத்தை ஒத்திருக்க்கும் மாலையாகும். . பூக்கள் எலி, முயல், அணில் மற்றும் கிப்பன் போன்ற விலங்குகளின் வடிவங்களாக அமைக்கப்படும்.
  2. சங்கிலி மாலை என்பது ஒரு தொடர் வட்டமுடைய மாலை ஆகும், இது ஒரு சங்கிலியை ஒத்திருக்கும்..
  3. சடை மாலை இரண்டு வட்டமான மாலை ஒன்றாக இணைக்கப்பட்டு, அதன் ஒவ்வொரு முனையிலும் பைன் வடிவ மாலை அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
  4. கொடி மாலை என்பது ஒரு கொடியின் வடிவத்தில் அமைக்கப்பட்ட அரை வட்ட மாலை ஆகும்.
  5. சரிகை மாலை மாலை முழுவதும் உள்ளும் புறமும் இடையிடையே தங்கச்சரிகை மற்றும் வெள்ளிச் சரிகையைச் செருகி, அலங்கரிக்கப்பட்ட ஒரு மாலை ஆகும்.
  6. ஆர்க்கிட் மாலை ஆர்க்கிட் மலர்களால் மட்டுமே தயாரிக்கப்படும் மாலை ஆகும்.[3]

பயன்கள்

[தொகு]

புவாங் மாலையின் பயன்பாட்டினை மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்.

மாலை சாய் தியோ

[தொகு]

மாலை சாய் தியோ( มาลัยชายเดียว) பொதுவாக மரியாதையைக் காட்டக்கூடிய ஒன்றாகவும் காணிக்கையாகவும் இம்மாலை பயன்படுத்தப்படுகிறது. கோயில்களிலும் கல்லறைகளிலும், இந்த மாலையானது பௌத்தத் துறவி சிலைகளின் கைகளில் இருந்து பிரார்த்தனை மெழுகுவர்த்திகளுடன் தொங்குவதைக் காணலாம். சங்கிலி மாலை, சடை மாலை ஆகியவை மாலை சாய் தியோவின் எடுத்துக்காட்டுகளாகும்.

மாலை சாங் சாய்

[தொகு]

மாலை சாங் சாய் (มาลัยสองชาย) பொதுவாக ஒரு நபரின் முக்கியத்துவத்தைக் குறிக்க அந்த நபரின் கழுத்தில் அணியப்படும் மாலையாகும். தாய்லாந்தின் திருமண விழாவில், மணமகனும், மணமகளும் இருவரும் பெரும்பாலும் மாலை சாங் சாய் அணிவார்கள்.

சாமுராய் மாலை

[தொகு]

சாமுராய் மாலை அல்லது அடையாளமான மாலை มาลัยชำร่วย ), இந்த மாலை சிறிய வடிவமுடையது. வழக்கமாக பெரிய மக்கள் குழு ஒன்றின் அடையாளத்திற்காக வழங்கப்படுகிறது.[4] இந்த மாலை வழக்கமாக ஒரு புரவலரால் வழங்கப்படுகிறது, உதாரணமாக, திருமண விழாக்கள், இல்ல விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள். பெயர் சூட்டு விழா ஆகியவற்றில் அணியப்படுகிறது. உயிரின மாலை இத்தகைய சாமுராய் மாலையாக அணியப்படுகிறது.[2] ஹவாய் கலாச்சாரத்தில் அன்பைக் காட்டுவதற்காக அணியப்படும் லீ மாலை போன்றே இந்த சாமுராய் மாலையும் அன்பைக் காட்டும் அடையாளமாக அணியப்படுகிறது.

மேலும் புவாங் மாலைகள் காணிக்கைகள், பரிசுகள், நினைவு பரிசுகள் வழங்க என இன்னும் பல செயல்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அரியணை அரங்குகள் மற்றும் வீடுகளை அலங்கரிக்வும் அவை பயன்படுத்தப்படுகின்றன. தாய்லாந்தின் இசை நிகழ்ச்சிகளில் அந்தக் கருவிகளின் உரிமையாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும், அந்த இசைக்கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நிகழ்வில் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வெற்றிக்காகவும் தாய்லாந்து இசைக் கருவிகளில் புவாங் மாலை தொங்கவிடப்படுகிறது.[1]

மூங்கில் மாலைகள்

[தொகு]

தாய்லாந்தின் மூங்கிலால் நெய்யப்பட்ட அலங்கார மாலைகள் சில சமயம் கானிக்கையாகச் செலுத்தப்படுகின்றன. சில நேரங்களில் இந்த மூங்கில் மாலைகள் மலர் மாலைகளுக்கு மாற்றாகவும் மற்ற படையல்களைத் தொங்கவிடவும் பயன்படுத்தப்படுகின்றன. தாய்லாந்தின் வடகிழக்கில் கலசின் மாகாணத்தின் குச்சினராய் மாவட்டத்தில் உள்ள குட் வா கிராம மக்களிடையே 'பூ தாய்' என்ற விழாப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மூங்கில் மாலைகள் உள்ளன. மேலும் தாய்லாந்தின் மழைக்காலத்தில் பௌத்தர்களின் நோன்புக்கால பண்டிகையிலும் மூங்கில் மாலைகள் பயன்படுத்தப்படுகின்றன, அவை "பன் காவ் பிரதாப் தின்" அல்லது "பன் புவாங் மலாய் பான் குட் வா" என்று அழைக்கப்படுகின்றன.

மூங்கில் மாலையின் விழா, குட் வா, தாய்லாந்து

[தொகு]

'பூ தாய்' விழாவைக் கொண்டாட, குட் வா கிராமவாசிகள் அலங்கரிக்கப்பட்ட மாலைகளை உருவாக்கி, வாட் கோக்கைச் சுற்றி ஊர்வலம் செல்வார்கள். தங்கள் கைவேலைகளைக் காண்பிப்பதற்காக, தாள இசையும் பாடலும் ஒலிக்க அதற்கேற்ப ஆடிக்கொண்டே இந்த ஊர்வலமானது நடைபெறும்.[5]

மேலும் காண்க

[தொகு]
  • புத்த பிரார்த்தனை மணிகள்
  • இந்து பிரார்த்தனை மணிகள்
  • மாலா, இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது
  • லீ (மாலை)
  • நமஸ்தே
  • பிரணாம

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 กระทรวงศึกษาธิการ. กรมการศึกษานอกโรงเรียน.หนังสือเรียนวิชาช่างดอกไม้สด.การจัดดอกไม้มาลัย(2535)
  2. 2.0 2.1 "Archived copy". Archived from the original on 2012-09-07. பார்க்கப்பட்ட நாள் 2013-11-13.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. จันทนา สุวรรณมาลี. มาลัย.ประเภทของมาลัย(2533)
  4. มหาวิทยาลัยราชภัฎสวนดุสิต. สถาบันภาษา.ดอกไม้กับวิถีชีวิตของคนไทย.มาลัย(2552)
  5. "Thailand's Festivities". Thailand's Festivities. Events Division Tourism Authority of Thailand. Archived from the original on 3 June 2016. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]