பெங்கேராங் (P157) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Pengerang (P157) Federal Constituency in Johor | |
பெங்கேராங் மக்களவைத் தொகுதி (P157 Pengerang) | |
மாவட்டம் | கோத்தா திங்கி மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 55,316 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பெங்கேராங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா திங்கி நகரம்; ஜொகூர் லாமா; பெங்கேராங்; பெனாவார்; தஞ்சோங் சூராட்; தெலுக் ரமுனியா |
பரப்பளவு | 885 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அசுலினா ஒசுமான் சாயித் (Azalina Othman Said) |
மக்கள் தொகை | 70,831 (2020)[4][5] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பெங்கேராங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pengerang; ஆங்கிலம்: Pengerang Federal Constituency; சீனம்: 边佳兰国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P157) ஆகும்.[6]
பெங்கேராங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து பெங்கேராங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
கோத்தா திங்கி மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கோத்தா திங்கி நகரம் தலைநகரமாக விளங்குகிறது.
கோத்தா திங்கி மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 291 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 152 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 71 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 34 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.
ஜொகூர் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான கோத்தா திங்கி மாவட்டத்தின் பரப்பளவு 3,482 சதுர கி.மீ. மாநிலத்தின் 18.34% பகுதியை உள்ளடக்கியது.[8]
பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பெங்கேராங் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P157 | 2004–2008 | அசுலினா ஒசுமான் சாயித் (Azalina Othman Said) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அசுலினா ஒசுமான் சாயித் (Azalina Othman Said) | பாரிசான் நேசனல் | 21,758 | 51.98 | 15.73 ▼ | |
பைருல்நிசார் ரகுமாட் (Fairulnizar Rahmat) | பெரிக்காத்தான் நேசனல் | 16,728 | 39.96 | 39.96 | |
செ சக்காரியா முகமட் சாலே (Che Zakaria Mohd Salleh) | பாக்காத்தான் அரப்பான் | 3,374 | 8.06 | 24.23 ▼ | |
மொத்தம் | 41,860 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 41,860 | 98.94 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 448 | 1.06 | |||
மொத்த வாக்குகள் | 42,308 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 55,316 | 76.40 | 6.56 ▼ | ||
Majority | 5,030 | 12.02 | 23.40 ▼ | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)