நிலைமை | கலைக்கப்பட்டது |
---|---|
துவங்கப்பட்டது | 1984 |
Successor | சூபான் புத்தகங்கள் வுமன் அன்லிமிட்டடு |
நாடு | இந்தியா |
வெளியிடும் வகைகள் | புத்தகம் |
பெண்களுக்கான காளி (Kali for Women-காளி பார் வுமன்) இந்தியாவில் ஒரு தொடக்கப் பெண்ணிய வெளியீட்டாளர் நிறுவனம் ஆகும். ஊர்வசி புட்டாலியா மற்றும் ரீத்து மேனன் ஆகியோர் 1984ஆம் ஆண்டில் காளியை பெண்களுக்காக நிறுவினர். இது பெண்களுக்கான வெளியீடுகளை வெளியிடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் இந்திய பதிப்பகமாகும். இவர்கள் இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தபோது, ரீத்து மேனன் ஓர் அறிஞராக இருந்தார். புட்டாலியா ஓக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் மற்றும் தில்லியில் உள்ள செட் புக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பணிபுரிந்தார். இவர்கள் மிகக் குறைந்த மூலதனத்துடன் இந்த அமைப்பினைத் தொடங்கினார்கள். ஆனால் கல்விசார் வெளியீடு மற்றும் ஆர்வலர் படைப்புகள், மொழிபெயர்ப்பு மற்றும் புனைகதை மூலம் இந்தியப் பெண்களின் குரல்களைக் கேட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து பாலினம் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் அக்கறை கொண்ட பிற இந்தியப் பத்திரிகைகள், பட்கல் மற்றும் சென் போன்ற வெளியீடுகள் மற்றும் சம்யா மற்றும் துலிகா புக்சு வெளியிடுகின்றன.
விராகோ பிரசுக்கு இந்தியாவின் பதில் என்று பரவலாகக் கருதப்படும் காளி பார் வுமன் சில படைப்புகளை வெளியிட்டது. இவற்றில் ஷேர் கி ஜான்காரி ("உடலைப் பற்றி") என்ற இந்தி குறிப்பு புத்தகம். ஷேர் கி ஜான்காரி 75 கிராமப் பெண்களால் எழுதப்பட்டு கிராமங்களில் சிறப்பு விலையில் விற்கப்பட்டது. ஷேர் கி ஜான்காரி, பாலியல் மற்றும் பெண்களின் உடல்நிலைகள், மாதவிடாய் தடைகள், சில விமர்சகர்களை அதிர்ச்சியடையச் செய்தன. பெண்கள் பிரச்சனைகள் பற்றி மிகவும் வெளிப்படையான கருத்துக்கள் இதில் கூறப்பட்டுள்ளன. இதுவரை கல்விசார் அச்சகங்கள் மலிவான, வெகுஜன இலக்கியத்திற்கான சந்தைகளைப் பெருமளவில் புறக்கணித்தன. (ஜோதி புட்டியின் கல்விப் புத்தகங்களைப் பார்க்கவும்.) [1]
காளி பார் வுமன் ராதா குமாரின் தி கிசுட்டரி ஆப் டூயிங் (1993), சுற்றுச்சூழல் பெண்ணியவாதி வந்தனா சிவாவின் ஸ்டேயிங் ஆலைவ் (1988) மற்றும் கும்கும் சங்கரி மற்றும் சுதேஷ் வைத் ஆகியோரின் மைல்கல் ரீகாஸ்டிங் வுமன்: எஸ்சேஸ் இன் காலனித்துவ வரலாற்றை (1989) வெளியிட்டது.[2]
2003-இல், காளி பார் வுமன் நிறுவனர்கள் பிரிந்தனர். புட்டாலியா 2003-இல் சூபான் புத்தகங்களை நிறுவினார். இது பெண்ணிய புத்தகங்களைத் தவிரப் புனைகதை, பொது ஆர்வமுள்ள புத்தகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான தலைப்புகளிலும் புத்தகங்களை வெளியிடுகிறது. மேனன் வுமன் அன்லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனங்கள் இன்றும் செயலில் உள்ளன.[3]
2011ஆம் ஆண்டில், ஊர்வசி புட்டாலியா மற்றும் ரிது மேனன் ஆகியோருக்கு இந்திய அரசு தேசத்திற்கு இவர்கள் செய்த பங்களிப்பிற்காக பத்மசிறீ விருதினை வழங்கியது.[4]