பெரானாங் (ஆங்கிலம்: Beranang; மலாய்: Mukim Beranang) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் (Hulu Langat District) உள்ள புற நகரப்பகுதி; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். இந்த முக்கிம் செமினி முக்கிம் மற்றும் சிப்பாங் மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.[1]
இதன் வடக்கே செமினி நகரம்; தெற்கே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்தின் நகரம்; ஆகிய இரு நகரங்கள் உள்ளன. உண்மையிலேயே பெரானாங் நகரம் இரண்டு மாநிலங்களுக்கு இடையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தலையாய பெரானாங் நகரம் சிலாங்கூர் மாநிலத்திலும்; உலு பெரானாங் நகரம் (Ulu Beranang) நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் உள்ளன.
பெரானாங் பகுதியில் 2 குன்றுகளும் ஒரு மலையும் உள்ளன.
பெரானாங்கில் சில ஆறுகள் உள்ளன. அவற்றில் பெரானாங் ஆறு என்பது செமனி ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இங்கு காணப்படும் ஆறுகள்:[2]
முன்பு இங்கு பல ரப்பர் தோட்டங்கள் இருந்தன. பின்னர் அவை செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன.