பெர்லிங் | |
---|---|
புறநகரம் | |
Perling | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°28′52.38″N 103°40′57.75″E / 1.4812167°N 103.6827083°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | ஜொகூர் பாரு |
மாநகரம் | இசுகந்தர் புத்திரி |
உருவாக்கம் | 1981 |
அரசு | |
• நகரண்மைக் கழகம் | இசுகந்தர் புத்திரி மாநகராட்சி |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 81200 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-07 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | J |
இணையதளம் | www |
பெர்லிங் அல்லது தாமான் பெர்லிங் (மலாய்: Taman Perling; ஆங்கிலம்: Perling; சீனம்: 柏伶) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறம் ஆகும். மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1][2]
இந்த நகர்ப்புறம் 1981-ஆம் ஆண்டில் உருவாகப்பட்டது. 10,000 மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. 992 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட இந்தக் குடியிருப்பு நகர்ப்புறத்தை பெலாங்கி நிறுவனம் (Pelangi Berhad) உருவாக்கியது.
பெர்லிங் நகர்ப்பகுதியின் முக்கிய அடையாளமாக பெர்லிங் மால் (Perling Mall) எனும் பெர்லிங் பேரங்காடி உள்ளது, இரண்டு தளங்களைக் கொண்ட பெர்லிங் பேரங்காடியில் ஏறக்குறைய 100 கடைகள் உள்ளன.[3]
பெர்லிங் குடியிருப்புப் பகுதியின் குன்றில் ஓர் ஆடம்பர அடுக்குமாடி கட்டடம் உள்ளது. பங்சாபுரி மிடாசு (Pangsapuri MIDAS) என்று அழைக்கப்படும் இந்த அடுக்குமாடி கட்டடம், பெர்லிங் நகர்ப்புறத்தின் சின்னமாக விளங்குகிறது.
மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம் வழியாக; ஜொகூர் பாருவில் உள்ள லார்க்கின் சென்ட்ரல் (Larkin Sentral) பேருந்து நிலையத்தில் இருந்து இந்தப் புறநகர் பகுதிக்குச் செல்லலாம்.[4]