பெர் ஒலோப் ஹல்த்

பெர் ஒலோப் ஹல்த் (ஆங்கிலம்: Per Olof Hulth) (2 ஜூன் 1943 - 26 பிப்ரவரி 2015) சுவீடிய வானியற்பியல் இயற்பியலாளர் ஆவார்.

இவர் ஸ்டாக்ஹோம் நகரில் வளர்ந்தார். ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டில் துகள் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் பல ஆண்டுகள் அதே பல்கலைக்கழகத்தில் பரிசோதனை வானியல் துகள் இயற்பியல் பேராசிரியராகவும், இயற்பியல் துறைத் தலைவராகவும் இருந்தார். இவர் ஜெனீவாவில் CERN இல் பணியாற்றினார். தென் துருவத்தில் உள்ள AMANDA திட்டத்தில் துருவ பனிப்பகுதியில் இருந்து நியூட்ரினோக்களைப் பற்றி படித்தறிவதில் முக்கிய ஐரோப்பிய அறிஞர்களில் ஒருவராகச் செயல்பட்டார். 2001 முதல் 2005 வரை இதன் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டார்.[1]

2004 இல் அறிவியலுக்கான ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் (Royal Swedish Academy of Sciences) இயற்பியல் வகுப்பின் உறுப்பினராக ஆனார்.[2] ராயல் அகாடமி கல்விக் குழுவின் தலைவராகவும் 2013 ஆம் ஆண்டில் ஸ்வீடனில் இலாப நோக்கற்ற சுயாதீனமான முதன்மை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கான தேசிய தடையைச் செயல்படுத்துவதில் ஒரு முக்கிய விமர்சகர் ஆகவும் செயல்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stockholms universitet: Ett nytt fönster mot universum பரணிடப்பட்டது 2007-12-10 at the வந்தவழி இயந்திரம், 12 September 2005
  2. "Kungl". Archived from the original on 2015-02-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  3. Svenska Dagbladet: Sätt stopp för vinstuttag i skolan, 27 March 2013
  4. Dagens Arena: ”Det fria skolvalet underminerar läraryrkets status” 27 March 2013