பெல்ஜியம் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் சங்கம் (Belgian Society of Biochemistry and Molecular Biology-BMB) என்பது பெல்ஜியத்தில் செயல்படும் இலாபநோக்கமற்ற உயிர்வேதியியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் சங்கமாகும்.[1][2]
மார்செல் பிளோர்கினின் முன்முயற்சியின் அடிப்படையில் பெல்ஜியம் உயிர்வேதியியல் மூலக்கூறு உயிரியல் சங்கம் உருவாக்கப்பட்டது. இது பன்னாட்டு உயிர்வேதியியல் ஒன்றியத்துடன் இணைந்து செயல்படுகிறது. இச்சமூகத்தின் முதல் சாசனத்தை எட்வார்ட் ஜே. பிக்வுட், ஜீன் ப்ராசெட், கிறிசுடியன் டி துவே, மார்செல் ப்ளோர்கின், லூசியன் மசார்ட், பால் புட்சீஸ், லாரண்ட் வாண்டெண்ட்ரீஷ் மற்றும் கிளாட் லீபெக் ஆகியோர் உருவாக்கினர். இந்தச் சங்கத்தின் முதல் பொதுச் சபை கூட்டம்12 சனவரி 1952 அன்று நடைபெற்றது. மேலும் சங்கத்தின் முதல் தலைவர் மார்செல் ப்ளோர்கின் ஆவார். கிளாட் லீபெக் செயலாளராகவும் பொருளாளராகவும் இருந்தார்.[3]