பேர்சி பிறவுன் | |
---|---|
பிறப்பு | 1872 பர்மிங்காம், ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 1955 | (அகவை 83)
தேசியம் | பிரித்தானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | றோயல் கலைக்கல்லூரி |
பணி | மேயோ கலைப் பள்ளி முதல்வர் இலாகூர் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் கொல்கத்தாவில் உள்ள அரசு கலைப் பள்ளியின் முதல்வர் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் செயலாளர் மற்றும் கண்காணிப்பாளர் |
பேர்சி பிறவுன் (Percy Brown, 1872-1955) என்பவர் ஒரு புகழ்பெற்ற பிரித்தானிய அறிஞரும், கலை விமர்சகரும், வரலாற்றாசிரியரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் ஆவார். [1] இவர் இந்திய கட்டிடக்கலை, கிரேக்க பாக்திரிய கலை ஆகியவை பற்றி செய்த ஆய்வுகளுக்காக நன்கு அறியப்படுகிறார். [2]
பிறவுன் 1872 இல் பர்மிங்காமில் பிறந்தார் [3] இவர் உள்ளூர் கலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார், பின்பு றோயல் கலைக் கல்லூரியில் படித்து 1898 இல் பட்டம் பெற்றார். அவர் 1899 முதல் 1927 வரை அதாவது 28 ஆண்டுகள் இந்தியக் கல்விச் சேவையில் பணி செய்தார். [3] [4] இவர் இலாகூரில் உள்ள மேயோ கலைப் பள்ளியின் (இன்று தேசிய கலைக் கல்லூரி) முதல்வராகவும், இலாகூர் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராகவும் ஆனார். 1909 இல், பிறவுன் மேயோ கலைப் பள்ளி முதல்வர் பதவிக்காலம் முடிந்தவுடன் இலாகூரை விட்டு வெளியேறினார், இவருக்குப் பின்பு இப்பதவியை இராம் சிங் என்பவர் 1913 வரை வகித்தார்.[5] அதே ஆண்டு, கொல்கத்தாவில் உள்ள அரசு கலைப் பள்ளியின் முதல்வரானார். [3] 1927 இல் ஓய்வு பெற்றார் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் செயலாளராகவும் பொறுப்பாளராகவும் 1947 வரை பணியாற்றினார், மீதி வாழ்க்கையை சிறீநகரில் கழித்தார்.[6]
பிரவுன் இந்திய கட்டிடக்கலை, பௌத்த கட்டிடக்கலை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்திய முதல் எழுத்தாளர்களில் ஒருவர். [7] 1940 இல் இரண்டு தொகுதிகள் கொண்ட ஆர்கிடெக்சர் (தொகுதி 1: புத்திசுட் அண்ட் இந்து பீரியட்சு), (தொகுதி 2 இசுலாமிக் பீரியட்) என்ற கட்டிடக்கலை சம்பந்தப்பட்ட நூலை 1940 இல் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார், இது ஒரு முக்கியமான கட்டிடக்கலை நூலாகும். [8] மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகள் ஏ டிசுக்ரிப்டிவ் கைடு டு தி டிபார்ட்மெண்ட் ஆப் ஆர்க்கியாலசி அண்ட் ஆன்டிகியூட்டிஸ் (1908), [9] பிக்சர்சுக் நேபால் (1912), [9] இந்தியன் பெயிண்டிங் (1918), [9] டூர்சு இன் சீக்கிம் அண்ட் தி டார்ஜிலிங் டிசுட்ரிக்ட் (1922) [9]