பேறுகாலச் சலுகைச் சட்டம் | |
---|---|
சான்று | PIB[1] |
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
சம்மதிக்கப்பட்ட தேதி | மார்ச் 27, 2017 |
சுருக்கம் | |
பேறுகாலத்தில் பெண்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய சலுகைகள் |
பேறுகாலச் சலுகைச் சட்டம் (The Maternity (Amendment) Bill 2017) என்பது 1961 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பேறுகாலச் சலுகைச் சட்டத்திலுள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்காக இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் ஆகஸ்டு 11, 2016 இல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் மார்ச் 9, 2017 இல் மக்களவையில் (இந்தியா) நிறைவேற்றப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டவரைவு ஒப்புதலானது மார்ச் 27,2017 இல் பெறப்பட்டது.[2]
இந்தச் சட்டமானது மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களான தொழிற்சாலை, சுரங்கத் தொழில், தோட்டம், அரசு நிறுவனங்கள், கடை போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
ஒரு நிறுவனத்தில் கடந்த 12 மாதங்களில் குறைந்தபட்சம் 80 நாள்கள் பணிபுரிந்த அனைத்துப் பெண்களும் இந்தச் சலுகையைப் பெறத் தகுதி உடையவர்கள் ஆவர். விடுப்புக் காலங்களில் பணியாளரின் தினசரி சம்பளத்தின் அடிப்படையில் அவருக்கு ஊதியம் வழங்கப்படுதல் வேண்டும்.[3]
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பானது 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது[4]. மேலும் குழந்தை பிறக்கும் நாளாக கருதப்படும் அந்த நாளுக்கு 8 வாரங்களுக்கு முன்னரே விடுப்பு எடுக்கவும் மீதம் உள்ள நாட்களை குழந்தை பிறந்த பின்னர் எடுக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளவர்கள் 12 வாரங்கள் விடுப்பு எடுக்கலாம். அதில் குழந்தை பிறப்பிற்கு முன்னர் 6 மாதம் பின்னர் 6 மாதம் போன்ற வகையில் விடுப்பு எடுக்கலாம்.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)