பைகா கல்லறைகள் (பைகா குடும்பங்களால் நிறுவப்பட்டது) | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
நகரம் | ஐதராபாத்து |
நாடு | |
ஆள்கூற்று | 17°20′38″N 78°30′15″E / 17.3439°N 78.5041°E |
பைகா கல்லறைகள் (Paigah Tombs) அல்லது மக்பரா ஷம்ஸ் அல்-உமாரா என்பது பைகா குடும்பத்தின் பிரபுக்களுக்குச் சொந்தமான கல்லறைகளாகும். இவர்கள் ஐதராபாத் நிசாம்களின் தீவிர விசுவாசிகளாக இருந்தார்கள். அவர்களுக்குக் கீழும், அவர்களுடன் சேர்ந்தும் அரச சபையிலும், அறக்காரியங்களை செய்பவர்களாகவும், தளபதிகளாகவும் பணியாற்றினர். பைகா கல்லறைகள் ஐதராபாத் மாநிலத்தின் முக்கிய அதிசயங்களில் ஒன்றாகும். அவை கட்டடக்கலை சிறப்பிற்காக அறியப்பட்டவை. அவை மொசைக் ஓடுகள் மற்றும் கைவினைப் பணிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கல்லறைகள் தெலங்காணாவின் ஐதராபாத்திலுள்ள சார்மினாருக்கு தென்கிழக்கில் 4 கி.மீ தொலைவிலுள்ள, பிசால் பந்தா என்ற புறநகரில் அமைந்துள்ளது. சந்தோஷ் நகருக்கு அருகிலுள்ள ஓவாசி மருத்துவமனையிலிருந்து ஒரு சிறிய பாதையும் உள்ளது. இந்த கல்லறைகள் சுண்ணாம்பு மற்றும் செங்கற்கலால் அழகாக பொறிக்கப்பட்ட பளிங்கு செதுக்கல்களால் கட்டப்பட்டுள்ளன. இந்த கல்லறைகள் 200 ஆண்டுகள் பழமையானவை. அவை பைகா பிரபுக்களின் பல தலைமுறைகளின் இறுதி ஓய்வு இடங்களைக் குறிக்கின்றன. [1] [2] [3]
கல்லறைகள் வெறிச்சோடியதாகவும், முற்றிலும் அக்கறையற்றதாகவும் தோன்றலாம். ஆனால் நெருக்கமான தோற்றத்தில், அந்த இடத்தின் வேலைப்பாடுகளை காணலாம். இதன் மலர் வடிவமைப்புகள் மற்றும் பொறிக்கப்பட்ட மொசைக் ஓடு வேலைகளில் அற்புதமான சிற்பங்கள் மற்றும் உருவங்களுடன், கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கல்லறைகளிலும், அவற்றின் சுவர்களிலும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும், துளையிடப்பட்ட பளிங்கு முகப்பில் மூடப்பட்டுள்ளன. அவற்றில் சில வரிசைகளாகவும் சில அழகாக செதுக்கப்பட்ட திரைகள் விதானங்களுடனும் உள்ளன.
இந்த இடம் எளிதில் அணுகக்கூடியது. மேலும் கல்லறைகள் அமைந்துள்ள 30 ஏக்கர் நிலங்களைச் சுற்றி கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை என்பது நிசாம் பாணி, ராஜ்புதன பாணி கட்டிடக்கலை ஆகியவற்றின் கலவையாகும். சுவர் பூச்சுகளில் முகலாய, பாரசீக மற்றும் தக்காண பாணியையும் குறிக்கும் அற்புதமான அலங்காரத்தையும் காணலாம். அவற்றின் துளையிடப்பட்ட திரைகளுடன் கூடிய வடிவியல் வடிவமைப்புகள் அவற்றின் தயாரிப்பிலும் கைவினைத்திறனிலும் தனித்துவமானது.
18 ஆம் நூற்றாண்டில் பைகாவின் குடும்பங்கள் ஐதராபாத் இராச்சியத்தில் மிகவும் செல்வாக்குமிக்கவர்களாகவும், சக்திவாய்ந்த குடும்பங்களாகவும் இருந்தனர். இவர்கள், இசுலாமியரின் இரண்டாவது கலீபாவான உமறு இப்னு அல்-கத்தாப்பின் வழித்தோன்றல்கள் ஆவர். இவர்களின் சாகிர்களின் பரப்பளவு 4000 சதுர மைல்கள் வரை இருந்தது. இவர்களின் மூதாதையரான அப்துல் பதே கான் தேக் ஜங் என்பவர் முதலாம் நிசாமுடன் தக்காணத்திற்கு வந்து பைகா பிரபுத்துவத்தை நிறுவினார். அவர் 1760 மற்றும் 1803க்கும் இடையில் ஆட்சி செய்த இரண்டாவது நிசாமிடம் பணி புரிந்தார். மேலும் "ஷாம்ஸ்-உல்-உம்ரா" (அதாவது பிரபுக்களிடையே சூரியன் என்று பொருள்) என்ற பட்டத்துடன் தளபதி பதவியில் உயர்ந்த பதவியையும் பெற்றார். இவர்களின் புகழ்பெற்ற குடும்பப் பின்னணி, நிசாமின் தலைமுறையினருக்கான அவர்களின் மதிப்புமிக்க சேவைகள் மற்றும் ஆளும் நிசாம்களுடனான திருமண நட்பு ஆகியவை நிசாம்களுக்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த தரவரிசைப் பிரபுக்களாக அமைந்தன. இவர்கள், குறிப்பிடத்தக்க நகரில் பல அரண்மனைகளைக் கட்டினர். அவற்றில் அஸ்மான் கர் அரண்மனை, குர்ஷீத் ஜா தேவ்தி, விகார்-உல்-உம்ரா அரண்மனை, பிரபலமான பாலாக்ணுமா அரண்மனை போன்றவை குறிப்பிடத்தக்கது.
கல்லறைகளில் காணாமல்போன கட்டடக்கலை அம்சங்களை மீட்டெடுப்பதற்கும், தவறான பழுதுபார்ப்புகளை மாற்றுவதற்கும், கட்டமைப்பு விரிசல்களை சரிசெய்வதற்கும் ஆகா கான் அறக்கட்டளை அமைப்பால் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. [4]