பைரோதான் தீவில் கலங்கரை விளக்கம் | |
குசராத்து | |
அமைவிடம் | பைரோதான் தீவு, ஜாம்நகர் குசராத்து இந்தியா |
---|---|
ஆள்கூற்று | 22°36′15″N 69°57′08″E / 22.604299°N 69.952189°E |
கட்டப்பட்டது | 1898 (முதல்) |
ஒளியூட்டப்பட்டது | 1958 (தற்போது) |
கட்டுமானம் | கொத்து கோபுரம் |
கோபுர வடிவம் | பால்கனி மற்றும் விளக்கு கொண்ட உருளை கோபுரம் |
குறியீடுகள்/அமைப்பு | கருப்பு மற்றும் வெள்ளை கோபுரம், சிவப்பு விளக்கு குவிமாடம் |
உயரம் | 18.3 மீட்டர்கள் (60 அடி) |
குவிய உயரம் | 19 மீட்டர்கள் (62 அடி) |
வீச்சு | 23 கடல் மைல்கள் (43 km; 26 mi) |
சிறப்பியல்புகள் | Fl W 20s. |
Racon | code K[1] |
Admiralty எண் | F0380 |
NGA எண் | 28352 |
ARLHS எண் | IND-157[2] |
பைரோதான் (Pirotan) பைரோத்தன் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டத்தின் கடல் தேசிய பூங்காவில் உள்ள ஒரு அரேபிய கடல் தீவாகும். இது கடற்கரையில் (பேடி துறைமுகம்) 12 கடல் மைல் (22 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. இது சதுப்புநிலங்கள் மற்றும் குறைந்த அலை கடற்கரைகளைக் கொண்டுள்ளது.[3] 3 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ரோசி தீவு தென்கிழக்கில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பூங்காவில் உள்ள 42 தீவுகளில், பைரோதான் தீவு மிகவும் பிரபலமானது. பார்வையாளர்கள் பொதுவாக அனுமதிக்கப்பட்ட இரண்டு தீவுகளில் இதுவும் ஒன்றாகும். வருகை கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. வனத்துறை, சுங்கத் துறை மற்றும் துறைமுகங்களிலிருந்து அனுமதி தேவை.[3] வெப்பமண்டல சதுப்புநில மரங்களின் ஒரு இனமான ரைசோபோரா, அவிசென்னியா மற்றும் செரியோப்ஸ் இனங்களைக் கொண்டுள்ளன.[4]
இந்த தீவு அதன் பெயரை பைரோதான் பதானில் இருந்து பெற்றது, இது பேடி பந்தரின் இடத்தில் இருந்த பண்டைய நகரமாகும்.[5]
1867 ஆம் ஆண்டில் தீவின் வடக்கு முனையில் ஒரு கொடிக் கம்பம் வைக்கப்பட்டது. 1898 ஆம் ஆண்டில் இது 21 மீட்டர் கொத்து கலங்கரை விளக்கத்துடன் மாற்றப்பட்டது. இது 1955-57 ஆம் ஆண்டில் 24 மீட்டர் உயர (79 அடி) கலங்கரை விளக்கம் கோபுரத்துடன் மாற்றப்பட்டது [6][7]
3 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பவளப்பாறைகளைச் சுற்றியுள்ள தீவு 1982 ஆம் ஆண்டில் கடல் தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.[8]
தீவில் வனக் காவலர் மட்டுமே இருக்கிறார். கலங்கரை விளக்கம் மக்கள் மற்றும் புனித புனித குவாஜா கைசர் ஆர்.ஏ. ஆலயத்தில் முஜாவர், குவாஜா கிஜெர் இரகமத்துல்லா ஹைலாயின் புனித ஆலயம் தீவில் அமைந்துள்ளது.[9]
பெரும்பாலான பார்வையாளர்கள் அதிக அலைகள் இருக்கும் காலைவேலையில் வந்து மாலைக்குள் புறப்படுகிறார்கள். குளிர்காலத்தின் வார இறுதி நாட்களில் 200–300 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள்.
தீவு பாதுகாக்கப்பட்ட கடல் பூங்காவாக இருப்பதால், பார்வையிட பல அனுமதிகள் தேவை. இந்திய நாட்டினருக்கு, உள்ளூர் வனத்துறை, சுங்கத் துறை மற்றும் துறைமுகத் துறையின் அனுமதி. வெளிநாட்டினருக்கு கூடுதலாக காவல் அலுவலகத்தில் அனுமதி தேவைப்படுகிறது.
தீவுக்கு வழக்கமான படகு சேவை இல்லை. ஒருவர் துறைமுகத்திலிருந்து படகுகளை வாடகைக்கு எடுக்க வேண்டும். இந்த படகுகள் தீவை அடைய சுமார் 1.5 மணி நேரம் ஆகும். கடற்கரை மிகவும் ஆழமற்றதாக இருப்பதால், படகுகள் அதிக அலைகளின் போது மட்டுமே தீவை அடைய முடியும் மற்றும் அதிக அலைகளின் போது தீவை விட்டு வெளியேறலாம்.
பின்வரும் கடல்வாழ் உயிரனங்கள் இங்குக் காணப்படுகின்றன.
{{cite web}}
: Invalid |ref=harv
(help)