பொட்டாசியச் சிறுநீர் (Kaliuresis) என்பது சிறுநீரில் பொட்டாசியம் வெளியேறும் நிலையாகும்.
இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தையசைடு சிறுநீரிறக்கி பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரகம் மீண்டும் உறிஞ்சும் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் உடலில் உள்ள உப்பின் (சோடியம் குளோரைடு) அளவைக் குறைப்பதே இச்செயல்முறையின் குறிக்கோளாகும். சிறுநீரகத்தில் உள்ள அதிகப்படியான சோடியம், சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுவதால், உப்பு நோயை (குறைந்த சோடியம் அளவு) ஏற்படுத்தலாம். இதனால் சோடியம்-பொட்டாசியம் பரிமாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் பொட்டாசியச் சிறுநீர் நிலை ஏற்படலாம்.[1]