பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பொலோனைடு | |
பண்புகள் | |
K2Po | |
வாய்ப்பாட்டு எடை | 287.18 கி/மோல் |
தோற்றம் | சாம்பல் நிறம்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் பொலோனைடு (Potassium polonide) என்பது K2Po என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். கூடிய வேதியியல் நிலைப்புத்தன்மை கொண்ட பொலோனிய வகைச் சேர்மங்களில் இதுவும் ஒரு பொலோனைடு ஆகும்.[2][3]
வெப்ப நிலைப்புத்தன்மை முற்றிலுமற்ற பொட்டாசியம் பொலோனைடு பொட்டாசியம் தெல்லூரைடை (K2Te) விடவும் அதிக இலத்திரன் நாட்ட ஆற்றலைக் கொண்டுள்ளது.[2][3]
ஐதரோபொலோனிக் அமிலம் என்றழைக்கப்படும் நீர் கலந்த ஐதரசன் பொலோனைடு பொட்டாசியத்துடன் ஒடுக்க வினை புரிந்து பொட்டாசியம் பொலோனைடு உருவாகிறது:[2][3]
பொட்டாசியத்தையும் பொலோனியத்தையும் சேர்த்து 300 முதல் 400 °செ வெப்பநிலைக்குச் சூடுபடுத்தியும் பொட்டாசியம் பொலோனைட்டைத் தயாரிக்கலாம்.[1] உயர் வெப்பநிலைகளில் இவ்வினை மீள்வினையாக நிகழ்கிறது.
சோடியம் பொலோனைடு போலவே பொட்டாசியம் பொலோனைட்டும் புளோரைற்றுக் கனிமத்தின் அமைப்புக்கு எதிரான படிக அமைப்பைக் கொண்டிருக்கிறது.[2][3]
{{cite book}}
: Cite has empty unknown parameter: |1=
(help)