நிதித்தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு | |
---|---|
பதினேழாவது மக்களவை | |
நிறுவிய ஆண்டு | 1 மே 1964 |
நாடு | இந்தியா |
தலைமை | |
தலைவர் | மீனாட்சி லேகி[1] |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
நியமிப்பவர் | இந்திய மக்களவைத் தலைவர் |
குழுவின் அமைப்பு | |
உறுப்பினர்கள் | 22 மக்களவை : 15 மாநிலங்களவை : 7 |
பதவிக்காலம் | 1 ஆண்டு |
அதிகார வரம்பு | |
பணிகள் | இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் |
விதிகள் & நடைமுறைகள் | |
Applicable rules | Rule 312A & 312B (page 115 - 116) Fourth Schedule (page 156) |
பொதுத்துறை நிறுவனங்களுக்கானக் குழு (Committee on Public Undertakings (COPU) 22 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.[2] இக்குழுவில் மக்களவை உறுப்பினர்களிலிருந்து 17 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 5 உறுப்பினர்களும் அங்கம் வகிப்பர். இக்குழுவின் உறுப்பினர்களை இந்திய மக்களவைத் தலைவர், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுப்பர். இக்குழுவின் பதவிக் காலம் ஓராண்டு ஆகும். அமைச்சர்கள் இக்குழுவில் இடம் பெற முடியாது. இக்குழுவின் உறுப்பினர் பின்னர் அமைச்சரானால், அவரால் இக்குழுவில் நீடிக்கமுடியாது. .[3]2019 - 2020 காலத்திற்கு இக்குழுவின் தலைவராக மீனாட்சி லேகி செயல்படுவார்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு பொது கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழுவுடன் இணைந்து செயல்பட்டு இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலைகளை அறிக்கைகளை ஆய்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)