பொன்னம்பலம் நாகலிங்கம்

மேலவை உறுப்பினர்
பொன்னம்பலம் நாகலிங்கம்
இலங்கை செனட் சபை உறுப்பினர்
பதவியில்
1951–1957
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதெல்லிப்பழை, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை சமசமாஜக் கட்சி
முன்னாள் கல்லூரிஇலங்கை சட்டக் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்

பொன்னம்பலம் நாகலிங்கம் (இறப்பு: 1980) இலங்கைத் தமிழ் இடதுசாரி அரசியல்வாதியும், இலங்கை செனட் சபை உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

நாகலிங்கம் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் பிறந்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, திருநெல்வேலி பரமேசுவரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று, பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்[1]. தெல்லிப்பழை, சுன்னாகம், உடுவில் ஆகிய இடங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். நாகலக்சுமி என்பவரை 1933 ஆம் ஆண்டில் மலேசியாவில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள். நாகலிங்கம் 1980 ஆம் ஆண்டில் இறந்தார். மனைவியார் 1997 இல் இறந்தார்.

அரசியலில்

[தொகு]

மாணவராக இருக்கும் போதே தமிழ் இளைஞர் காங்கிரசில் இணைந்து அரசியலில் தீவிரம் காட்டினார். 1940களில் இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியில் சேர்ந்தார். 1947 தேர்தலில் அக்கட்சி வேட்பாளராக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தமிழ் காங்கிரசு வேட்பாளர் தந்தை செல்வநாயகத்திடம் தோற்றார்.[2]

1951 முதல் 1957 வரை இலங்கை செனட் சபை உறுப்பினராக இருந்தார். 1960 மார்ச்சு தேர்தலில் உடுவில் தேர்தல் தொகுதியில் லங்கா சமசமாசக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் வி. தர்மலிங்கத்திடம் தோற்றார்.[3] 1960 சூலை, 1965 தேர்தல்களிலும் உடுவில் தொகுதியில் போட்டியிட்டு தர்மலிங்கத்திடம் தோற்றார். 1960களில் சுன்னாகம் நகரசபைத் தலைவராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • "Glossary of People: Na". Marxists Internet Archive.
  • "Senator P.Nagalingam". rootsweb.
  • Rajabalan, Raymond (March 2009). "First Among Us - Part 3A". Monsoon Journal 3 (10): 40–41. http://www.monsoonjournal.com/ArticleFiles/Archives/Arch_on_1-Mar-2009/Archive_1-Mar-2009.pdf. பார்த்த நாள்: 2012-10-06.