போக்கிரி ராஜா | |
---|---|
இயக்கம் | ராம்பிரகாசு ராயப்பா |
தயாரிப்பு | பி. டி. செல்வக்குமார் டி. எசு. பொன்செல்வி |
கதை | எசு. ஞானகிரி (வசனங்கள்) |
இசை | டி. இமான் |
நடிப்பு | ஜீவா சிபிராஜ் ஹன்சிகா மொத்வானி |
ஒளிப்பதிவு | அஞ்சி |
படத்தொகுப்பு | வி ஜே சபு ஜோசப் |
கலையகம் | பிடிஎஸ் பிலிம்ஸ் இண்டர்நேசனல் |
விநியோகம் | காஸ்மோ வில்லேஜ் |
வெளியீடு | மார்ச்சு 4, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
போக்கிரி ராஜா (Pokkiri Raja) என்பது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இதனை ராம்பிரகாசு ராயப்பா இயக்கினார். இதில் ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோட்வானி ஆகியோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் மார்ச் 4, 2016 இல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[1]
இந்தக் கதையின் நாயகன் சஞ்சீவிக்கு ஜீவா (திரைப்பட நடிகர்) கொட்டாவி விடுவதில் பிரச்சினை உள்ளது. அதனாலேயே அவரின் வேலை பறிபோகிறது. மேலும் இவரின் காதலி சுஜிதாவும் இவரை விட்டுப் பிரிந்து செல்கிறார். எனவே புதியதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அங்கு ராகவைச் (மனோபாலா) சந்திக்கிறார். ஒருநாள் சுனிதாவைப் (ஹன்சிகா மோட்வானி) பார்க்கிறார். தனது நண்பன் மோஜோ (யோகி பாபு) சுனிதா போதைப்பொருளுக்கு அடிமையானவர் என சஞ்சீவியிடம் தெரிவிக்கிறார். பின்புதான் சாலை ஓரங்களில் சிறுநீர் கழிப்பவர்களின் மீது நீர் தெளிப்பவர் எனத் தெரிந்துகொள்கிறார். குணா (சிபிராஜ்) ஒருவரைக் கொலை செய்வதற்காக செல்லும் போது சஞ்சீவி அவரின் மீது நீரைத் தெளித்துவிடுகிறார். அதனால் அவர் கைது செய்யப்படுகிறார். சிறையிலிருந்து வெளிவரும் குணா , சஞ்சீவியை பழிவாங்கினாரா என்பதனை இறுதியில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது சூன், 2015 இல் வெளியானது. அதில் ஜீவா (திரைப்பட நடிகர்) கதாநாயகனாக நடிக்க , ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்குவதாக தகவல் இருந்தது. இவர் 2015 ஆம் ஆண்டில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.[2][3] சிபிராஜ் முக்கிய எதிராளிக் கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தம் ஆனார். துவக்கத்தில் ஹாரிஸ் ஜயராஜ் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இறுதியில் டி. இமான் பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசையமைக்க ஒப்பந்தம் ஆனார்.[4] ஜீவாவே இந்தப் படத்தினை தயாரிப்பதாக நினைத்தார். பின் பி. டி. செல்வக்குமார் தயாரித்தார்.[5]
ஹன்சிகா மோட்வானி நாயகியாக ஒப்பந்தம் ஆனார். செப்டம்பர்,2015 இல் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஜெயா தொலைக்காட்சி பெற்றது.
Professional ratings | |
---|---|
Review scores | |
Source | Rating |
ஒன்லி கோலிவுட் | |
இந்தியா கிளிட்ஸ் | |
தெ டைம்ஸ் ஆஃப் இந்தியா | |
பிகைண்ட் உட்ஸ் | |
ரெடிஃப் .காம் | |
ஃபில்மி பீட் |
இந்தத் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. விமர்சகர்கள் இதற்கு எதிர்மறையான விமர்சனங்களைத் தந்தனர். இயக்குநர் ராயப்பா தேர்வு செய்த கதைகளத்தைப் பாராட்டினார்கள். ஆனால் காட்சி மாந்தர்களின் பின்புலம் மற்றும் திரைக்கதை தொய்வாக இருந்ததாக அவர்கள் விமர்சனம் செய்தனர். சிஃபி வலைத்தளத்தில் பின்வருமாறு விமர்சனம் வழங்கப்பட்டது. ராயாப்பாவின் கதை நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஆனால் அதற்கான பொருத்தமான , வலிமையான திரைக்கதை அமைக்கத் தவறியுள்ளார். மேலும் கணினி வரைகலை ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்திருந்தது.[6] இந்தியாகிளிட்ஸ் இந்தத் திரைப்படத்திற்கு ஐந்திற்கு 1.8 புள்ளிகள் வழங்கியது.[7] தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எம். சுகுநாத் நேர்மறையான விமர்சனங்களைத் தந்தார். அவர் ஐந்திற்கு மூன்று புள்ளிகள் வழங்கினார். இதன் முதல் பாதி கொட்டாவி விடும் வகையில் உள்ளதாகவும் ஆனால், இரண்டாம் பாதி தொடர்ந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.[8] பிஹைண்ட் உட்ஸ் , ஐந்திற்கு இரண்டு புள்ளிகள் வழங்கியது. சிறப்பான கதை ஆனால் திரைக்கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் எனத் தெரிவித்தது.[9] ரெடிஃப் வலைத்தளம் 1.5 புள்ளிகள் வழங்கி இதனைப் பார்ப்பது கால விரயம் எனத் தெரிவித்தது.[10]
இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் போக்கிரி ராஜா (2016 திரைப்படம்)