Warning: Value not specified for "common_name" | |||||
போபால் முகமை | |||||
பிரித்தானிய இந்தியாவின் அரசியல் முகமை | |||||
| |||||
மத்திய இந்திய முகமையின் வரைபடத்தின் நடுவில் போபால் முகமையின் அமைவிடம் | |||||
வரலாற்றுக் காலம் | குடிமைப்பட்ட கால இந்தியா | ||||
• | நிறுவப்பட்டது | 1818 | |||
• | 1947 இந்திய விடுதலை | 1947 | |||
பரப்பு | |||||
• | 1901 | 30,181 km2 (11,653 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 11,57,697 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 38.4 /km2 (99.3 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
போபால் முகமை (Bhopal Agency), குடிமைப்பட்ட கால இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த மத்திய இந்தியாவின் சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் இம்முகமை 1818-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு முடிய செயல்பட்டது.[1] இதன் தலைமையிடம் போபால் நகரம் ஆகும். 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, போபால் முகமையின் மொத்த பரப்பளவு 30,181 சதுர கிலோ மீட்டர் மற்றும் மக்கள் தொகை 11,57,697 ஆகும்.
மராத்தியப் பேரரசிற்கு எதிராக பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் ஆட்சியாளரகள் நடத்திய மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் மராத்திய பேரரசு வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே மராத்தியப் பேரரசில் இருந்த சிற்றரசுகள் அனைத்தும், 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றக்கொண்டு, ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.
இந்த சுதேச சமஸ்தானங்களை நிர்வகிக்க போபால் முகமை 1818-ஆம் ஆண்டில் போபால் முகமை நிறுவப்பட்டது. மத்திய மாகாணத்தின் தலைமை ஆணையாளரின் கீழ் போபால் முகமை செயல்பட்டது. போபால் முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1854-ஆம் ஆண்டு முதல் போபால் முகமை, மத்திய இந்திய முகமையின் கீழ் செயல்பட்டது.
1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் போபால் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள், 1948-ஆம் ஆண்டில் புதிய மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
1931 முடிய போபால் முகமையில் 9 சுதேச சமஸ்தான மன்ன்ர்களும், பல ஜமீன்தார்களும் இருந்தனர்.
பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்:
வணக்கமில்லா சுதேச சமஸ்தானங்கள்: