போர்லாக் விருது (Borlaug Award) என்பது கோரமண்டல் இன்டர்நேஷனல் உர நிறுவனத்தால் வழங்கப்படும் விருதாகும். இது இந்திய விஞ்ஞானிகள் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் பங்களிப்புகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது 1972இல் உருவாக்கப்பட்டு, நோபல் பரிசு பெற்றநார்மன் ஈ. போர்லாக் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்த விருது பெறுபவருக்கு இந்திய ரூபாய் 5,00,000 ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம் மற்றும் மேற்கோள் வழங்கப்படுகிறது.[1]
இந்த விருதைச் சர்வதேச உரத் தொழில்துறை சங்கத்தின் ஐ.எஃப்.ஏ நார்மன் போர்லாக் விருது அல்லது உலக உணவு பரிசு அறக்கட்டளை வழங்கிய கள ஆராய்ச்சிக்கான போர்லாக் விருது ஆகியவற்றுடன் குழப்பமடையக்கூடாது.
↑"Jain - Indian Fellow". Indian National Science Academy. 2016. பார்க்கப்பட்ட நாள் September 7, 2015.
↑"Chaudhury - Deceased Fellow". Indian National Science Academy. 2016. Archived from the original on செப்டம்பர் 11, 2016. பார்க்கப்பட்ட நாள் September 7, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)