போர்ஸ் ஒன் | |
---|---|
துறையின் கண்ணோட்டம் | |
உருவாக்கம் | 26 நவம்பர் 2010 |
பணியாளர்கள் | 300 கமாண்டோ வீரர்கள்[1] |
அதிகார வரம்பு அமைப்பு | |
செயல்பாட்டு அதிகார வரம்பு | மகாராட்டிரம், இந்தியா |
பொது இயல்பு | |
செயல்பாட்டு அமைப்பு | |
தலைமையகம் | மும்பை |
துறை நிருவாகி |
|
அமைச்சு | மகாராட்டிரா காவல் துறை |
போர்ஸ் ஒன் (Force One) (மராத்தி: बळ एक) தேசிய பாதுகாப்புப் படை போன்று மகாராட்டிரம் மாநிலத்தில், குறிப்பாக மும்பை மாநகரத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு சிறப்புக் காவல் பிரிவாகும். 2008 மும்பையில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, 26 நவம்பர் 2010 அன்று போர்ஸ் ஒன் தீவிரவாத எதிர்ப்புப் படை தொடங்க காரணமாயிற்று. போர்ஸ் ஒன் படைப்பிரிவுக்கு, மகாராட்டிரா காவல் துறையில் பணியாற்றும் 28 முதல் 35 வயது வரை உள்ள, விவேகமும்; துடிப்பும் நிறைந்த 300 இளம் அதிகாரிகள் மற்றும் காவலர்களைக் கொண்டு போர்ஸ் ஒன் படை நிறுவப்பட்டுள்ளது.[2] இதன் தலைமையிடம் மும்பையில் உள்ளது..[3]போர்ஸ் ஒன் படையின் தலைவராக மகாராட்டிரா காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் இகாப செயல்படுவார்.
இப்படையினருக்கு தீவிரவாதிகளை எதிர் கொள்ளத்தக்க வகையில் சிறப்புத் துப்பாக்கிகள், மார்புக் கவசங்கள், இருட்டில் பார்க்கும் கண் கண்னாடிகள், விரைவு வாகனங்கள் மற்றும் கையெறி குண்டுகள்[4]
வெடி குண்டுகளை கையாளவும், தொலைதொடர்பு வசதிகளை தற்காலிகமாக துண்டிக்கவும் இப்படையினருக்கு புனேவில் பயிற்சி வழங்கப்படுகிறது.[5]மேலும் இப்படைகள் இந்திய இராணுவத்துடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்கிறது.[6]