மகேந்திரலால் சர்க்கார் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 2, 1833 பைக்பாரா கிராமம், ஹவுரா மாவட்டம் |
இறப்பு | பிப்ரவரி 23, 1904 கொல்கத்தா |
பணி | மருத்துவர், கல்வியாளர் |
வாழ்க்கைத் துணை | ராஜகுமாரி |
சர்.மகேந்திரலால் சர்க்கார் (Mahendralal Sarkar;1833–1904) ஒரு இந்திய மருத்துவரும் கல்வியாளரும் சமூக ஆர்வலரும் ஆவார். ஓமியோபதி மருத்துவத்தில் புகழ்பெற்ற மகேந்திரலால் சர்க்கார் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1876 இல்) கொல்கத்தாவில் 'இந்திய அறிவியலைக் கற்பிக்கும் கழகத்தை' (Indian Association for the Cultivation of Science)நிறுவியவர் ஆவார்.[1]
சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுள் ஒருவர்.[2]