மக்கள் நீதி மய்யம் (Makkal Neethi Maiyam) என்பது நடிகர் கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும்.[2] கமல்ஹாசன் இந்த கட்சியின் நிறுவனத்தலைவர் ஆவார்.
பிப்ரவரி 21, 2018 இல் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கமல் தம் கட்சிப் பெயர் மற்றும் கொடியை ஏற்றி வைத்தார்.[3][4] இந்தப் பொதுக்கூட்டத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.[5]கேரள முதல்வர் பினராயி விஜயன் காணொளிக் காட்சி மூலம் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.[6]
கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் ”நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும்’’ என்று பதிவிட்டார்.[7]
கட்சியின் சின்னத்தில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், மற்றும் நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களையும், நீதியையும் மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல் கூறினார்.[9] தேர்தல் ஆணையத்தால் மக்கள் நீதி மய்யத்திற்கு "கை மின்விளக்கு" சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.[10]
இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்களவை உறுப்பினர்கள் பட்டியல்களை தலைவர் கமலஹாசன் வெளியிட்டார்.
இதில் பெரம்பலூர் தொகுதி மநீம வேட்பாளர் அருள்பிரகாசம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி இந்தியக் குடியரசுக் கட்சி (கூட்டணிக் கட்சி) வேட்பாளர் தங்கராஜ் ஆகியோரின் வேட்புமனு தாக்குதல் நிராகரிக்கப்பட்டது.
மேலும் மநீம சார்பில் தலைவர் கமலஹாசன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் அல்லது தமிழக சட்டமன்றத்தில் பலமான எதிர்கட்சி தலைவராக விளங்குவார் என்று கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழக மக்கள் நினைத்த போது அனைத்திற்க்கும் மாறாக கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தோற்று போனார்கள்.
மேலும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தோற்று போனார்.
பின்னர் இக்கட்சியின் தோல்விக்கு காரணம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் பிரச்சார களத்தில் தமிழக அரசியலில் அதிமுக–பாஜக ஆட்சியை விமர்சித்த அளவிற்கு கடந்த 50 வருட காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த திமுக ஆட்சியையும், 50 வருட கால மத்திய காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சிக்காமல் போனதாலே அவர்கள் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதைவிட தேர்தல் களத்தில் மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது கூட்டணிக்கு கடந்த காலத்தில் இந்தியாவை ஊழலில் தலைக்க செய்த காங்கிரஸ் கட்சியை அழைத்தது. கமலஹாசனின் கட்சி ஆதரவாளர்கள், ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையேவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் கூறப்படுகிறது.