மக்தூம் சகாபுதீன் مخدوم شہاب الدین | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 ஏப்ரல் 1947 |
தேசியம் | பாக்கித்தான் |
அரசியல் கட்சி | பாக்கித்தான் மக்கள் கட்சி (PPP) |
வேலை | அரசியல்வாதி |
அறியப்படுவது | Member of the National Assembly |
சமயம் | இசுலாம் |
மக்தூம் சகாபுதீன் (Makhdoom Shahabuddin, உருது, சராய்கி: مخدوم شہاب الدین; பிறப்பு 7 ஏப்ரல், 1947) ஓர் பாக்கித்தானிய அரசியல்வாதி. பெப்ரவரி 2008 முதல் இன்றுவரை பாக்கித்தானின் தேசிய சட்டப்பேரவையின் உறுப்பினராக உள்ளார். கூட்டரசின் அமைச்சரவையில் நிதி, சுகாதாரம், துணிகள் துறைகளில் பொறுப்பேற்றவர். தெற்கு பஞ்சாபின் செராய்கி பகுதியிலுள்ள ரகீம் யார் கான் நகரைச் சேர்ந்தவர்.[1] பாக்கித்தான் மக்கள் கட்சி (PPP) உறுப்பினர்.[2][3]
சூன் 19, 2012இல் பாக்கித்தானின் உச்ச நீதிமன்றம் நடப்பு பிரதமர் யூசஃப் ரசா கிலானியை தகுதி நீக்கம் செய்த பிறகு பாக்கித்தான் மக்கள் கட்சியால் பிரதமர் பதவிக்கு தெரிந்தெடுக்கப் பட்டுள்ளார்.[4]
இவர் ஓர் பிரபல சுஃபி சமயப்பெரியவரின் வழித்தோன்றல் ஆகும்.[5]
பிரதமராக வேட்புமனுத் தாக்கல் செய்த நாள் சூன் 21,2012 அன்று போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் சகாபுதீனுக்கு பிணையில்லா கைதுக்கான பிடியாணை பிறப்பித்துள்ளது.[6]