![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் இருகுளோரேட்டு அறுநீரேற்று
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் இருகுளோரேட்டு | |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
10326-21-3 36355-97-2 7791-19-7 | |
ChemSpider | 64853748 80564724 128878 |
EC number | 233-711-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image Image |
பப்கெம் | 25155 71437298 146100 |
| |
UNII | M536P01U3N |
UN number | 2723 |
பண்புகள் | |
Mg(ClO3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 191.20 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம் |
அடர்த்தி | 1.747 கி/செ.மீ3 (அறுநீரேற்று)[1] |
உருகுநிலை | 35 °C (95 °F; 308 K)[2] |
கொதிநிலை | 120 °C (248 °F; 393 K)[2] (சிதைவடையும்) |
114 கி/100 மி.லி (0 °செல்சியசு) 123 கி/100 மி.லி (10 °செல்சியசு) 135 கி/100 மி.லி (20 °செல்சியசு) 155 கி/100 மி.லி (30 °செல்சியசு) 178 கி/100 மி.லி (50 °செல்சியசு) 242 கி/100 மி.லி (60 °செல்சியசு) 268 கி/100 மி.லி (100 °செல்சியசு)[2] | |
அசிட்டோன்-இல் கரைதிறன் | கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு படிகக் கட்டமைப்பு |
புறவெளித் தொகுதி | P21/c |
Lattice constant | a = 6.39 Å, b = 6.51 Å, c = 13.90 Å |
படிகக்கூடு மாறிலி
|
|
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H332 | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
6348 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | கால்சியம் குளோரேட்டு இசுட்ரோன்சியம் குளோரேட்டு பேரியம் குளோரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மக்னீசியம் குளோரேட்டு (Magnesium chlorate) என்பது Mg(ClO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Mg(ClO3)2(H2O)x என்பதை இச்சேர்மத்தின் பொது வாய்பாடாகக் குறிப்பிடுவர். வாய்பாட்டிலுள்ள் x இன் மதிப்பு 0 என்றால் அது ஒரு நீரிலிக்கும், x இன் மதிப்பு 2 எனில் அது இருநீரேற்றுக்கும் x இன் மதிப்பு 6 எனில் அது அறுநீரேற்று வகைக்கும் பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. வெப்பவியல் ரீதியாக இவை அனைத்தும் நிலைப்புத்தன்மை கொண்ட வெண்மை நிற உப்புகளாகும். மக்னீசியம் குளோரேட்டு அறுநீரேற்று புதன் கோளின் மேற்பரப்பில் காணப்படுவதாக அறியப்படுகிறது.[3]
மக்னீசியம் ஆக்சைடை குளோரினுடன் சேர்த்து சூடுபடுத்தி மக்னீசியம் குளோரேட்டு மாதிரிகள் 1920 ஆம் ஆண்டில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டன. மக்னீசியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து மக்னீசியம் குளோரேட்டு தயாரிப்பது மிகவும் நவீன முறையாகும்.[4] அசிட்டோனில் மக்னீசியம் குளோரேட்டில் கரையும் தன்மையைப் பயன்படுத்தி இதை சுத்திகரிக்க முடியும்.[4]
மக்னீசியம் குளோரேட்டு அறுநீரேற்று Mg(ClO3)2·6H2O 35 °செல்சியசு வெப்பநிலையில் நான்கு நீரேற்றாகச் சிதைவடைகிறது. 65 பாகை செல்சியஸ் வெப்பநிலையில், இது இருநீரேற்றாகச் சிதைவடைகிறது. நீரிழந்து, பின்னர் 80 பாகை செல்சியசு வெப்பநிலையில் கார உப்பை உருவாக்குகிறது. 120 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேலும் சூடாக்கினால் நீர், ஆக்சிசன், குளோரின் மற்றும் மக்னீசியம் ஆக்சைடாக சிதைவடைகிறது[2]
இரண்டு மற்றும் அறுநீரேற்று வடிவங்கள் Mg2+ மையங்களுடன் எண்முக வடிவத்தில் படிகமாகின்றன என்பதை எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மற்ற ஈந்தணைவிகளில் நீர், பிரத்தியேகமாக அறுநீரேற்றில் உள்ளது. இருநீரேற்றில் குளோரேட்டும் ஒருங்கிணைக்கப்பட்டு, பாலம் அமைக்கும் ஈந்தணைவியாக செயல்படுகிறது.[1]
மக்னீசியம்(II) குளோரேட்டு ஒரு சக்திவாய்ந்த உலர்த்தியாகவும், பருத்தி, உருளைக்கிழங்கு மற்றும் அரிசி ஆகிய தானியங்களுக்கு ஓர் இலையுதிர்ப்பி மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பக்கவிளைவுகளற்ற மூலப்பொருளாக கண் சொட்டு மருந்துகளில் உயவு எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது. [5]
மக்னீசியம் குளோரேட்டு ஓர் ஆக்சிசனேற்றியாகும். வெடிக்கும் சேர்மங்களை இதைப் பயன்படுத்தி உருவாக்க முடியும்.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)