மதாபர்
માધાપર | |
---|---|
கிராமம் | |
![]() மதாபர் நுழைவுவாயில் | |
ஆள்கூறுகள்: 23°13′48″N 69°42′39″E / 23.230127°N 69.710821°E | |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | கட்ச் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 26.67 km2 (10.30 sq mi) |
ஏற்றம் | 105.156 m (345.000 ft) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
பின் கோடு | 370020 |
தொலைபேசி இணைப்பு | 2832 |
வாகனப் பதிவு | GJ-12 |
மதாபர், குசராத்து மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமம் ஆகும். மாவட்டத் தலைமையிட நகரமான [புஜ்ஜிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 7600 குடியிருப்புகள் கொண்ட இந்த கிராமத்தின் 17 வங்கிகளில் 5,000 கோடி வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பணம் படைத்த கிராமம் ஆகும். [1] [2]2011 குஜராத் நிலநடுகக்த்தின் போது இக்கிராமத்தின் பழைய வீடுகள் பலத்த சேதமுற்றது.
சமீப காலங்களில், நகரம் பசுமையானதாகவும், புதிய ஏரிகள், அணைகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் என மாறிவிட்டது. புதிய சுகாதார மையங்கள், விளையாட்டுப் பூங்காக்கள் மற்றும் கோயில்கள் என அனைத்து வசதிகளும் உருவாகிவிட்டது. இக்கிராமத்தில் பொருளாதாரம் பெருகி உள்ளது. சுமார் 5,000 கோடி ரூபாய் அளவிற்கு சேமிப்பும், 17 வங்கிகளும் இக்கிராமத்தில் உள்ளது.
கட்ச் மிசுட்டுரி என்னும் பிரிவிரனரால் 12 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட 18 கிராமங்களில் மதாபரும் ஒன்றாகும்.[3][4][5][6]
1884-ம் ஆண்டு முதல் அரசு ஆண்கள் பள்ளி தொடங்கப்பட்டது. 1900-ம் ஆண்டு முதல் பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது. முதல் உயர்நிலை பள்ளி, 1968-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
மதாபரில் இரண்டு பெரிய ஏரிகள் உள்ளன. இச்சகாசாகர் எனும் ஏரி 1900-ம் ஆண்டுவாக்கில் கட்டப்பட்டது. இன்னொன்று மேக்ராச்சி ஏரி, கட்ச் மாநிலத்தின் கடைசி ஆளுமையின் கீழ் கட்டப்பட்டது.
திருமால் கோயில், சிவன் கோயில், பார்லா கோயில் மற்றும் சுவாமிநாராயண் கோயில் (1949) உள்ளன.
இப்பகுதியின் பொருளாதாரத்தில் விவசாயம் பெரும்பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் விளையும் பெரும்பாலான விவசாய பொருட்கள் மும்பை நகருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சோளம், மாம்பழம் மற்றும் கரும்பு இங்கு முதன்மையாக பயிரடப்படுகின்றன.
மதாபரின் பல குடியிருப்பாளர்கள், இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் கனடா போன்ற வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். அவர்களுடைய சேமிப்பை தங்கள் சொந்த கிராமத்தில் சேமிக்கின்றனர். கிராமங்களில் அடிப்படையில் வங்கி வைப்பு சுமார் ரூபாய் 5,000 கோடி ஆகும்.
புலம் பெயர்ந்த மக்களும், வெளி நாடுகளில் வாழும் மக்களும் தங்களுடைய கிராமத்தின் மீது பேரன்பு வைத்துள்ளனர், அதன் காரணமாக சமூக அமைப்புகளையும் வைத்துள்ளனர். [14]