மதுசூதன் குப்தா মধুসূদন গুপ্ত | |
---|---|
![]() பண்டிட் மதுசூதன் குப்தா | |
பிறப்பு | 1800[1] பிரித்தானிய இந்தியா வங்காளம், ஹூக்லி மாவட்டம் பாக்யாபாத் |
இறப்பு | நவம்பர் 15 (aged 56) பிரித்தானிய இந்தியா, வங்காளம், கொல்கத்தா |
இறப்பிற்கான காரணம் | நீரிழிவு நோய் |
தேசியம் | பிரித்தானிய இந்தியர் |
இனம் | வங்காளி |
பணி | மருத்துவர் |
அறியப்படுவது | நவீன இந்தியாவிலும் ஆசியாவிலும் முதன்முதலாக மனித சவக்கூறாய்வை மேற்கொண்டது |
பெற்றோர் | பலராம் குப்தா |
பிள்ளைகள் | கோபால் சந்திர குப்தா |
மதுசூதன் குப்தா (Pandit Madhusudan Gupta, 1800 – 15 நவம்பர் 1856) என்பவர் ஒரு இந்திய மருத்துவர் மற்றும் மனித உடலை பிணக்கூறாய்வு செய்வதற்குப் பயிற்சி பெற்ற முதல் இந்திய மருத்துவர்.[2] கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டபோது, குப்தா பெரிய அளவில் நிலவிய சமூகத் தடைகளை உடைத்து மனித சடலத்தை கூறாய்வு செய்ய முன்வந்தார். 1836 அக்டோபர் 28 அன்று குப்தா பிணக் கூறாய்வு செய்த முதல் இந்தியர் என்ற சிறப்பைப் பெற்றார். இவரின் இந்தப் பணிக்கு ராஜ் கிருஷ்ணா டீ, உமாச்சரன் செட், துவாரகாநாத் கூப்து, மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நபீன் சந்திர மித்ரா ஆகியோர் உதவினர். இவருடைய அந்தச் சாதனையைப் பாராட்டி, அன்றைய பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் வில்லியம் கோட்டையில் வானை நோக்கி 50 குண்டுகள் முழங்கி கவுரவித்தது. பழம்பெரும் இந்திய மருத்துவரான சுஸ்ருதர் போன்றோர், மனித உடலைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காக மனிதப் பிணங்களை கூறாய்வு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், மருத்துவர் மதுசூதன் குப்தா நவீன மேற்கத்திய மருத்துவராக அதைச் செய்த முதல் இந்தியராக இருந்தார். [3]
குப்தா ஒரு வைத்திய குடும்பத்திலிருந்து வந்தவர், அவர்களின் குடும்பமானது பாரம்பரியமாக ஆயுர்வேத மருத்துவக் குடும்பமாகும். இவர் 1800 ஆம் ஆண்டில் பைத்தியபாத்தி என்ற இடத்தில் பிறந்தார் இவருக்கு பலராம் குப்தா என்ற பெயர்வைக்கப்பட்டது. இவர் தன் பள்ளிப்படிப்பை முடித்தபின்னர், சமசுகிருதக் கல்லூரியில் சேர்ந்தார்.
1830 இல், அவர் சமஸ்கிருத கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
1835 இல், மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரியில் குப்தா துணை ஆசிரியராக இணைந்தார். 1840 ஆம் ஆண்டில் அவர் மாணவர்களுடன் சேர்ந்து மேற்கத்திய மருத்துவத்தைப் படித்தார்.
கல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வரலாற்றில் குப்தா முக்கிய பங்களிப்பு செய்தார். மருத்துவ கல்லூரியின் துவக்கக் காலத்தின்போது, இந்திய மாணவர்கள் மேற்கத்திய மருத்துவத்தைக் கற்கத் தயங்கினர் காரணம் இறந்த உடலைத் தொட்டு அறுத்து கற்கவேண்டி இருப்பதால், அது அவரகளுக்கு அதிருப்தியையும், மனத்தடையையும் ஏற்படுத்தியது மேலும் அக்காலக்கட்டத்தில் ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துவம் பிரபலமாக இருந்ததும் ஒரு காரணமாகும், அந்த நேரத்தில், சமஸ்கிருத அறிஞராகவும், ஆயுர்வேத மருத்துவருமான குப்தா மேறகத்திய மருத்துவத்தைக் கற்கவந்து, இறந்த உடலைக் கையாண்டது, மக்களிடையே மாற்றத்தை உருவாக்கியது. அதன் பிறகு பலர் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்க வந்ததனர். பிரித்தானிய அரசாங்கம் அவருக்கு 50 துப்பாக்கி குண்டு மரியாதையை வழங்கியது.[4][5] 50 துப்பாக்கி குண்டுகளை வெடித்து மரியாதை செய்தார்கள் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற கருத்தும் உள்ளது.
{{cite book}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help)
{{cite book}}
: More than one of |ISBN=
and |isbn=
specified (help)